உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

189

சினம் செருக்கு அழுக்காறு அவர் பொருட்பாற்று என்னும் ஆறு இழி தகவுகளின் வலியை ஒடுக்கு அடைவதாகிய குற்றவீடும, உருவும் வினை குறிப்பு எண்ணம் அறிவு என்னும் ஐவகைப்பாகுபாடும் ஒருங்கே பொன்றக்கெட்டு அடைவதாகிய கந்தவீடுமென இருபகுதித்தாம். இனி, வழக்குத் தான் உண்மை வழக்கும் இன்மை வழக்குமென இருபிரிவுடையதாகி, மறித்தும் அவை தொகையுண்மை வழக்குத் தொகையின்மை வழக்குத் தாடர்ச்சியுண்மை வழக்குத் தொடர்ச்சியின்மை வழக்கு மிகுத்துரையுண்மை வழக்கு மிகுத்துரையின்மை வழக்கு என ஆறாம் என்றும், மேற் கூறிய உருவம் முதலான ஐந்து கந்தங்களும் ஒருங்குகூடி வருபவனே ஓர் உயிராமென்றல் தொகையுண்மை வழக்காமன்றி, அவ்வைந்தையுங் கூடாமற் றனி நிற்பவனே ஓர் உயிராமென்றல் தொகையின்மை வழக்கா மென்றும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலமும் பற்றாது காரண காரியத் தொடர்ச்சியாய்க் கெட்டுக் கெட்டுத் தோன்றும் என்றுரைக்கும்வழியே தொடர்ச்சி யுண்மை வழக்காமன்றி ஒருவனே எக்காலத்தும் மாறுபாடின்றியுளன் எனக்கோடல் தொடர்ச்சியின்மை வழக்காமென்றும், தோன்றிய பொருள்கள் அத்துணையும் அழிவெய்து மெனவுரைத்தலே மிகுத்துரை யுண்மை வழக்கமல்லத கட்பொறிக்குப் புலனாகமற் போனது போற் காணப்படினும் மற்று அவை காரணப் பொருளாய் நிலை பெறுமெனக் கிளர்த்தல் மிகுத்துரை யின்மை வழக்காமென்றும் கூறுவர். இவ்வாற்றால், ஐந்து கந்தங்களும் ஒருங்கு தொக்க தொகையே உயிரெனப்படுமல்லது இவ்வைந்தின் வேறாய் உயிரென்பதொரு தனிப்பொருள் இல்லையென்பதே சௌத் திராந்திக பௌத்தர் கோட்பாடாதல் தெற்றென உணர்ந்து கொள்க.

னி, மேற்கூறிய உள்வழக்கும் இல்வழக்கும், உள்ளது சார்ந்த உள்வழக்கு, உள்ளது சார்ந்த இல்வழக்கு, இல்லது சார்ந்த உள்வழக்கு, இல்லது சார்ந்த இல்வழக்கு என்னும் நான் கோடுகூடிஆறாம். இவற்றுள் உள்வழக்காவது யானைக்குக் கோடு உண்டென உள்ளதனை உள்ளவாறே கூறுதல்; இல்வழக்காவது முயற்குக் கோடு இல்லையென இல்லதனை இல்லையெனவே கூறுதல்; உள்ளது சார்ந்த உள்வழக்காவது உணர்வைச் சார்ந்த உணர்வு தோன்றும் என்றல்; உள்ளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/222&oldid=1589454" இலிருந்து மீள்விக்கப்பட்டது