உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

❖ - 25❖ மறைமலையம் – 25

சார்ந்த இன்மை வழக்காவது உணர்வு அழிந்தாற் பின் உணர்வு இல்லையாம் என்றல்; இல்லது சார்ந்த உண்மை வழக்காவது ணர்வு முன்னர் இல்லாதிருந்த பின்னர் உண்டாமென்றல்; ல்லது சார்ந்த இல்வழக்காவது உள்ளங்கையில் மயிர் உளவென்றலும் அவற்றாற் கயிறு திரிக்கப்படும் என்றலுமாம். இத்துணையும் இவர் மதக் கோட்பாடுகளாம்.

இனி, இவர் வர் ஏனைச் சமயத்தாரை மறுக்குமாறு மேலெடுத்துக் காட்டிய உரு அரு வீடு வழக்கு என்னும் நான்கும் அவற்றின் விரிவும் அல்லாமல், வானம் காலம் திக்கு என்னும் அருவப்பொருள்களும், உயிர் என்பதோர் அறிவுப்பொருளும், மனமொழிகளைக் கடந்துநின் றறியப்படுவதாகிய கடவுள் என்பதொன்றும் உளவெனக் கூறுதல் மயக்கவறிவுடையார் கூற்றே போலும்! எற்றாலெனிற் கூறுதும்: அருவப்பொருள் ஒன்று உண்டென்றல் அதன் றொழில்பற்றி யல்லது துணியப் படாமையானும், வானம் ஒருதொழில் பிரியக் கண்டில மாதலானும் ஏனை றான்கு பொருள்களையுந் தாங்கி நிற்றலே அதன் செயலென வுரைப்பின் அஃது அருவப் பொருளாதலால் அஃது ஏனையவற்றைத் தாங்குமென்றல் பொருந்தாமையானும், ஓசைக்கு அது முதலெனின் உருவுடைப் பொருளின் இயக்கத்தானன்றி ஓசை உளதாகக் காணாமையின் அஃது அருவினி லுண்டாமென்றல் ஏலாமையானும், அஃது எங்கும் நிறைந்து நிற்பதெனின் அவ்வாறு நிற்கும். அதனைக் கண்டு அது வான் அது வான் என வழங்குவாரைக் கண்டில மாதலானும் வான் என்பதோர் அருவப் பொருள் உளதெனக் கோடல் திரிபுணர்ச்சியேயாம்.

இனி, அறிவுடைய உயிர்ப்பொருள் ஒன்று உளதெனலும் ஆகாது. அஃது அறிவுடையதாயின் ஐம்பொறிகளையும் அவற்றாற் பற்றப்படும் புலன்களையும் நூல்களையுங் கொண்டு அறிவு கூடுதல் என்னை? பொறிகளோடு ஒற்றித்து நின்றும் புலன்களைத் தொட்டு நின்று.ம் அறிவு விளங்கப் பெறுதலே அதன் இயற்கை யெனின், பொறி புலன்களோடு ஒன்றுசேர்ந்து நின்றவழியும் இருளின்கட் பசுமை செம்மை முதலிய நிற வேறுபாடு பகுத்தறியக் காணாமையின் அஃதுஅறிவுடைத் தென்றல் அமையாது. அல்லதூஉம், பொறிகளின்றி அறிவு விளங்கலின்மை யானும், பொறிகள் அறிவுடையன அல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/223&oldid=1589455" இலிருந்து மீள்விக்கப்பட்டது