உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

191

வாகையால் அவற்றின்கண் உடன்நின்று அறியும் அறிவு வேறாய் ஒன்று உண்டெனின் ஐம்புலனால் அறியும் ஐந்தறிவினையும் ஒரு புலனில் நின்றே அறிந்திடல் வேண்டும் அல்ல தொருதன்மைத் தாகவாவது அறிந்திடல் பேண்டும் மற்று அவ்வாறு அறியக் காணாமையானும், பொறிகளை ஒன்றொன் றாய்ச் சார்ந்தே அறியுமெனின் அவ்வாறு கூறுதல் சௌதா திராந்திகரான எம்மனோர் கோட்பாடேயாகலின் 'சுற்றிச் சுற்றி அவ்வூரே புகுந்தான்' என்பதுபோல் அஃது யாங் கூறும் முடிபோயாமாதலானும் அறிவும் அதனை யுடையதோர் உயிரும் உண்டடென்றல் போலியேயாம். அற்றன்று, அறிவும் அறியப்படுவதுமாகிய ஞானஞேயங்களின் வேறாக அறியும் முதலாகிய ஞாதுரு ஒன்று உளதெனக் கோடலே முறையா மாலெனின், அற்றேல் அங்ஙனம் அறியும்

6

னய

முதல்

அறிவுடையதோ அல்லதோ என வினாயினார்க்கு அஃது அல்லதெனிற் பின்னை உயிர் மண்போல் அறிவில் பொருளாம்; அஃது உடையதெனிற் பருப்புச் சோற்றுக்குப் பருப்புச்சோறேகறி யென்பதனோ டொக்குமாகலின் அறிவாகிய ஞானத்தின் வேறாக அறிவுடையதோர் உயிருண்டென்றல் மிகையாமென்க.

இனி, உயிரினை அருவப்பொருளென் றுரைப்பின் அருவாகிய அஃது உருவப்பொருளாய உடம்பினைப் பொருந்தி நிற்றல் அமையாமையானும், அற்றன்று அஃது உருவுடைய தேயா மெனிற் பின் அஃது பிறிதோர் உருவப் பொருளாம் உடம்பினில் அடங்கி நிற்றல் ஏலாமையானும், இவ்விரண்டு மன்றி உயிர் ஓர் அணுவா மெனிற் சிறு துகளாகிய அஃது உடம்பின்கட் காணப்படும் பல தொளைகளில் ஒன்றினூடே புகுந்து புறம் போதல் வேடுமாகலானும், அதனை என்றும் உள்ள பொருளெனிற் றோற்றக் கேடுகள் இலதாதல் வேண்டு மாகலானும், அஃது எங்குமாய் நிறைந்து நிற்பதெனின் அவ்வாறு று நிற்றல் ஒருவாற்றானும் அறியப்படாமையானும், உடம்பு கடோறும் நிறைந்து நிற்பதே அதன் நிறைவாமெனின் உடம்பழியுங்கால் அதுவும் உடனழிய வேண்டுமாகலானும், உடம்பினில் ஓர் உறுப்பினைப்பற்றிக் கொண்டு நிற்குமெனின் அவ்வுறுப்பினை யொழித்து ஒழிந்தவற்றை அஃது அறிதல் சல்லாமையானும் உயிர் என்பதொரு பொருள் இல்லை யென்றலே தேற்றமாம் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/224&oldid=1589456" இலிருந்து மீள்விக்கப்பட்டது