உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் - 25

இனிக் காலமென்பது ஓர் உள்பொரு ளென்றலும் அடாது.பொருள்களைத் தோற்றுவித்தலும் நிலைபெறுத்தலும் அழித்தலுமாகிய தொழில்கள் காலத்தின் றொழில்களென வுரைப்பின் அது பொருள்களோ டொன்றுபட்டுப் போமல்லது ன்றுபட்டுப்போமல்லது அவற்றின் வேறாமாறில்லை. அவற்றோ டொன்றாய் நிற்கு மென்றாலும், அவை யழியுங்கால் அவற்றோடு தானும் அழிந்து படுமல்லது வேறு தனித்து நில்லாது. ஆதலாற் காலத்தினி யல்பை உற்று நோக்குவார்க்கு அஃதோர் இல்வழக்கேயா மென்பது தெற்றென விளங்கா நிற்கு மென்க.

இனித் திக்கு என்பதோர் உள்பொருள் உண்டென்றலும் இசையாது. என்னை? மூவரில் நடு நிற்கும் ஒருவன் தனக்குக் கீழ் நிற்பானை நோக்கத் தான் மேல் நிற்பானாய்த், தனக்குமேல் நிற்பானை நோக்கத் தான் கீதுநிற்பானாய் வழங்கப்படுதலை உற்றுணருங்கால் ஒருவர்க்கு மற்றொருவரும் ஒன்றுக்கு மற்றொன்றும் நிற்கும் நிலையே அங்ஙனங் கிழக்கு மேற்கென வழங்கப்படுகின்றதன்றி, இவற்றின் வேறாய்க் கிழக்கு மேற்கென வரையறுத்து உணரப்படுவன பிற இன்மையின் என்பது.

இனி இவ்வுலகம் ஒரு முதற்கடவுளாற் படைக்கப்பட்ட தென்பதூஉத் பொருந்தாமை காட்டுதும் படைப்பிற்கு முன் உலகம் உளதெனின் ஒருவன் அதனைப் படைத்தல் வேண்டாம்; அதற்குமுன் அஃது இல்லையெனிற் பின்னர் அஃது ஒருவராற் படைக்கப்படுதலுங் கூடாது. படைப்பென்பது காரணத்திலி ருந்து ஒரு காரியத்தைப் பிறப்பித்தலேயாமெனில், உலகம் ஒரு நிலையில் உள்ளதாய் மற்றொரு நிலையில் இல்லதாமெனப் பட்டு அருகர்கூறும் 'உண்டு இல்லை' எனும் வழக்காய் முடியும். ஒரு குயவன் மண்ணின்று குடத்தைத் தோற்றுவிக்குமாறு போல இறைவனும் உலகத்தைத் தோற்றுவிப்பானெனின், அவன் அவ்வாறாதனை எங்கு நின்று படைப்பானெனும் வினா உண்டாம். உலகத்தின் மீது நின்றே படைப்பானெனின் அவ்வாறவன் நிற்கும் உலகம் அவன் படைப்பிற்கு முன்னரே உளதாதல் பெறப்படும். அற்றன்று, இறைவன் தனக்கு இயல்பாகவுள்ள பேரிரக்கத்தால் இல்லாத உலகத்தை இருக்குமாறு படைத்தானெனிற் கொலைத் தொழில்வல்ல அரிமா புலி பாம்பு கூற்றம் என்னுமிவற்றைப் படைத்திட்டவன் ரக்கத்தை என்னென்பேம்! நன்று சொன்னாய், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/225&oldid=1589457" இலிருந்து மீள்விக்கப்பட்டது