உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 25

மென்பர். முதலிற்

உலகத் தோற்றத்திற்குக் காரணமா பரமாணுக்கள் இரண்டு சேர்ந்து இருமையணுத் தோன்றும், ருமையணு மூன்று சேர்ந்து மும்மையணுத் தோன்றும்; இங்ஙனமே நான்மையணு முதலியன வுண்டாய் அவற்றின் சேர்க்கையால் மாநிலம் மாநீர் மாநெருப்பு மாவளி முதலியன தோன்றி இம்முறையே படைப்பு நடை பெறுமென்றும், மற்று இவை ஒடுங்குங்காலும் இம்முறையே ஒடுங்குமென்றும், பரமாணுக்களிலிருந்து உண்டாம் இத்தோற்ற வொடுக்கங்கள் இறைவன் கருதுமாற்றான் நிகழுமென்றும் விளக்குவர்.

இனி, உயிர் மனத்தோடுகூட, மனம் பொறிகளோடுகூடப், பொறிகள் புலன்களோடுகூட ன்பதுன்பங்கள் உளவா மெனவும், மனம் உயிரின் வயத்தில் நின்று ஒருவழிப்படவே அவ்விரண்டும் இலவாமெனவும், இதுவே யோகமா மெனவும், இவ்வாற்றல் இப்பருவுடம்பின் தொடர்பு அற, அவ்வழியே நுண்ணுடம்பின் தொடர்பும் அற்றுப் போமெனவும், அஃது அறவே இனிப் பிறப்புக்கள் உளவாமாறில்லையெனவும், இதுவே டுபேறாமெனவுங் கூறுப. நல்வினையுந் தீவினையும் இவை யிரண்டு மல்லாதனவும் என உயிர்களின் வினைகள் முத்திறப் படும் என்பதும், தீவினைகளுள் அறக்கொடியது கொலைவினை யேயாம் என்பதும், அத்தகைய உயிர்க் கொலையைப் புரிவ ரோடு கூடுதலுந் தீவினையாய் முடியுமென்பதும், கொலைத் தொழிலுங் கொலைநினைவும் இல்லாரோடு உண்டாம் சேர்க்கையே நல்வினை யாமென்பதும் இவர்தங் கோட்பாடு களாம். இவ்வைசேடிக நூலார் கூறும் பொருள்களிற் பெரும் பாலன சைவ சித்தாந்த நூற் பொருள்களாதல் கடைப்பிடித் துணரற்பாற்று.

u

இனி, மீமாஞ்சகர்மதம் இன்னதென்பது காட்டுதும். இவர் இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையுமே கடவுள் நிலையில் வைத்து, அவ்வேதங்களின் மேற் கடவுள் இல்லையென்று கூறுதலால், அவர் அவ்வேதங் களைப் பற்றிக் கூறுவன சில ஈண்டு எடுத்துரைக்கற்பாற்று. இம் மீமாஞ்சகர் மதத்திற்கு முதல் நூலாவது சைமினிமுனிவன் பன்னிரணடு அத்தியாயங்களிற் செய்த மீமாஞ்சை சூத்திரங் களேயாம். அவற்றுள் முதல் அத்தியாயத்தின்கண் முதற் சூத்திரம் “ அதாதோதர் மஜிஞ்ஞாசா" என்று நல்வினை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/243&oldid=1589477" இலிருந்து மீள்விக்கப்பட்டது