உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

209

மக்களும் அவரிற் றாழ்ந்த ஏனை யுயிர்களுமெல்லாங் கருவிற் பிறப்பனவே யாமென்றுங் கூறுப.

ள்

இனி முழுமுதற் கடவுள் பலவாதலின்றி ஒன்றேயா மெனவும், அதனிருப்பு உரையளவையினும் கருதலளவையினும் வைத்து அறியப்படுமெனவும், ஏனை உயிர்களின்பாற் காணப் படுங் குற்றம் சிறிதும் இல்லாதது அதுவாமெனவும், இறைவன் வாய்மொழி அனைத்தும் பிரமாணமேயாமெனவும் வைசேடிக நூலார் கூறுவர். மேலும், பொருளை யறிவிக்குஞ் சொல் வழக்கும், யாண்டும் செய்வினையுண்மையும் அவனை யறிதற்கு அடையாளங்களா மென்பர். உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள்கட்கும் பெயர் இறைவனாலேயே தரப் பட்டன வென்பதூஉம் இறைவனாகிய வினைமுதலின்றி வினையுளதாதல் செல்லா தென்பதூஉம் இவர்தங் கருத்தாம். மறைமொழிகள் சொற்கோவை யுடைமையால், அச்சொற்களும் பிறந்தழியும் நீர்மையுடைமையால் அவை என்றும் நிலை யுதலுடைய வாகாவெனக் கூறி இவர் முமாஞ்சகர் கொள்கை யை மறுப்ப. மேலும், சொல்லுவோன் இன்றிச் சொற்கள் என்றும் நிலை பேறாய் உளவாமெனக் கூறும் மீஞ்மாசக நூலார் கொள்கை பொருந்தாமை காட்டிச், சொற்கள் பொருளறி வுறுக்கும் ஓசைகளாதலால் அவை அறிவுடைய முதல்வனாற் பிறப்பிக்கப் பட்டனவேயா மென நிறுவுவர்.

இனிப்பொறிகளோடு மனங்கூடிய வழி அறிவு நிகழ்தலும், அவற்றோ டது கூடாதவழி அது நிகழாமையும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், பொறிகளின் வேறாக மனம் என்பதோர் அகக்கருவி உண்டெனவும், அஃது ஒவ்வொரு பொறியினும் ஒவ்வொரு நேரத்தின் இயங்குவதல்லாமல், எல்லாப் பொறி யினும் எந்நேரத்தினும் இயங்கக் காணாமையின் மனம் எங்கும் நிறைந்த பொருளாதலின்றி ஓர் அணுவள விற்றாமெனவும், ஒவ்வோருடம்பினும் ஒவ்வொரு மனம் உளதாமெனவும், அஃதென்றுமுள்ள அழிவில் பொருளாமெனவுங் கூறுப.

இனி,என்றுமுள்ள பொருளாவது நிலைபேறுடையதாய்த்

தான் ஒன்றிற் காரியப்படாததாய் இருப்பதெனவும், அவ்வியல் பின பரமாணுக்களா மென்பது காரியப் பொருள்களின் அடையாளத்தால் உணரப்படு மெனவுங்கூறிப்,பரமாணுக்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/242&oldid=1589476" இலிருந்து மீள்விக்கப்பட்டது