உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

-

மறைமலையம் - 25

ஒற்றித்து நிற்றல்பற்றி ஓரோ விடங்களில் நான் என்பது உடம்போ டொன்றுபடுத்தி வழங்கப்படுமாயினும் தன்னின் வேறாம் பொருள்களை எனது மனை எனது ஊர் எனது பொருள் என்று வழங்குமாறு போலவே எனது உடம்பு எனது கண் எனது கை என்னும் வழக்கும் பெரும்பான்மையாய் நிகழக் காண்டலின் அங்ஙனம் என் என்னுஞ் சொல்லாற் குறிக்கப்படும் உயிர்க்கு அவ்வுடம்பும் உறுப்பும் வேறாமென்பதே தேற்றமாம். இங்ஙனம் நான் என் என்னும் உணர்வுக்கு உயிர் ஒன்றுமே உரித்தாதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், அவ்வுணர்ச்சிக்கு உயிர்நேரே புலனாவ தொன்றாமென்க. அதுவே யுமன்றி, ஒருவன் தன் நினைவு உடம்பு உறுப்புக்களிற் செல்லா மற்றடுத்து, ஐம்பொறிகளையும் அடைத்து, எஞ்சித் தன்னள வாய் நிற்புழி ஆண்டு அவன்பால் நான் எனும் உணர்வு நிகழக் காண்டலின், அவ்வுணர்வுக்குப் பற்றுக் கோடாவது உயிர் ஒன்றுமே என்பது முடிக்கப்படும்.

இனி, இன்பதுன்பநுகர்ச்சியும் அறிவும் வேறுபாடின்றி எல்லாவுயிர்கட்கும் ஒத்த இயல்பினவாய்க் காணப்படுதலின், உயிர் தனித்தனிப் பலவாதலன்றி ஒன்றேயாமென உரையாமோ வெனின், உரையாமன்றே, என்னை? ஒருவர் செல்வராயும் னையொருவர் வறியராயும், ஒருவர் இன்பமுடையராயும் பிறரொருவர் துன்பமுடையராயும், ஒருவர் உயர்ந்த பிறப்பின ராயும் மற்றையொருவர் தாழ்ந்த பிறப்பினராயும், ஒருவர் கற்றறிவுடையராயும் ஏனையொருவர் அஃது இல்லாதவராயும், ஒருவர் இளையராயும் பிறரொருவர் முதியராயும் பல்வேறு வகைப்பட்ட தன்மைகளோடு காணப்படுதலானும், ஒருவர்க்கு உண்டாம் இன்ப துன்ப நுகர்ச்சிகள் ஏனையோர்க்கும் ஒத்தபடியாய் உடன் நிகழக் காணாமையானும் உயிர்கள் ஒன்றல்லவாய்ப் பலப்பலவாமென்பதே துணிபொருளாமென்க. மேலும், உயிர்கள் பல உண்மை முண்டகோபநிடதத்திற் சால்லப் படுதலினாலும் (முண்டகோபநிடதம் 311) நன்கு தெளியப்படும் என்பது இவ்வுயிர்கள் கருவாய்ப் பிறப்பனவும் அங்ஙனம் பிறவாதனவும் என இருபாலனவென்ப. நீர் மண்டிலம் ஞாயிற்று மண்டிலம் வளிமண்டிலம் என்பவற்றின்கண் வாழும் உயிர்களெல்லாங் கருவிற் பிறவாதனவென்றும், கடவுளரும் முனிவரரும் அவ்வகுப்பினராவரென்றும், அவரல்லாத

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/241&oldid=1589475" இலிருந்து மீள்விக்கப்பட்டது