உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

207

உடம்பும் அவ்வுடம்பின்கட் சில உறுப்புக்களாகயி ஐம்பொறி களுமே அறிவுடையன என்றுரைப்பின் அங்ஙனமே அதன்கண் உள்ள கை கால் முதலான ஏனை உறுப்புக்களும் அறிவுடைய னவா யிருத்தல் வேண்டுமன்றே, அவை அவ்வாறிருப்பக் காணா மையின் உறுப்புக்களில் இல்லாததோர் அறிவு அவை தொக்க உடம்பின்கண் உண்டாமென்றல் சிறிதும் இறையாதென்க. அற்றன்று, உடம்பினுறுப்புகள் அறிவுஉடைய வல்லவாயினும் அவை தமக்கெல்லாம் முதலான பரமாணுக்கள் அறிவுடைய வாகலின், அப்பரமாணுக்களின் வேறாக வேறாக உயிர் ஒன்று உண்டெனக்கோடல் பொருந்தாதெனின், உடம்பிற்குப் போலவே குடம் படம் முதலியவற்றிற்கும் பரமாணுக்களே முதலாகலின் அக்குடம் படம் முதலியனவும் அறிவுடையவா யிருத்தல் வேண்டும்; மற்று அவை அவ்வாறிருப்பக் காணா மையின் பரமாணுக்கள் அறிவு உடையனவென்றல் அமையாது. ஆதலால், உயிரின் சேர்க்கையினான் மட்டுமே ஐம்பொறி களினும் அறிவு நிகழுகின்ற தெனக் கடைப்பிடிக்க அறிவு நிகழ்ச்சியே உயிரின் உண்மைக்கு அடையாளமாமென்க. அல்லதூஉம், முயற்சியும் முயற்சியின்மையும் ஒருவன்தன் உயிரின்கண் முட்டுமே நிகழக்காண்ட லின், அவையும் உயிரினிருப்பை யுணர்தற்குரிய அடையாளங்களா மென்று தெளிதல் வேண்டும். இன்னும், மேற் செல்லும் மூச்சும், கீழ்ச் செல்லுங் காற்றும், கண்மூடுதலும், கண்திறத்தலும், பிழைத் திருத்தலும், மன இயக்கமும், ஏனைப் பொறிகளின் நிகழும் வேறுபாடும், இன்பந் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி முதலியனவும் உயிரினிருப்பை அறிவிக்கும் அடையாளங்களாம். உயிர் பண்பையுடைய பொருளாய் என்றும் உள்ளதாகும். கட்புலனாய்த் தோன்றும் புகையைக் கொண்டு தீயினுண்மை யறியப்படு மாறுபோல, உயிரும் கட்புலனாவதோர் அடை யாளங் கொண்டு அறியப்படுமென்று கொள்ளற்க.

அஃது ஒவ்வொருவருக்கும் மெய்ந்நிகழ்ச்சியாய்த் தோன்றும் நான் என்னும் உணர்வுக்கு L டமாதல் பற்றித் துணியப்படுமென்க. அற்றேல் 'நான் பருத்தேன்' 'நான் சிறுத்தேன்' 'நான் சாத்தன்' 'நான் கொற்றன்' என்றற் றொடக்கத்து வழக்குகளின்கண் நான் எனும் உணர்ச்சிக்கு இடமாவது உடம்பே யாமா லெனின், உயிர் உடம்போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/240&oldid=1589473" இலிருந்து மீள்விக்கப்பட்டது