உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

-

  • மறைமலையம் - 25

ரைத்தல் பொருந்தாதாகலின். இனி, ஒரு பொருளின் இருப்பு அப்பொருளின் வேறாவதாம்; அங்ஙனமே ஒரு பொருட்டன் மையும் பண்பின்றன்மையும் தொழிற்றன்மையும் அப் பொருள் பண்பு தொழில்களின் வேறாவனவாம் என்று அறியற்பாற்று.

ஓசையாகிய பண்பு ஏனை நிலம் நீர் தீ வளி முதலிய நான்கு பொருள்களுள் ஒன்றற்கு உரியதாதல் செல்லாமையானும், அந்நான்கும் நாற்றம் சுவை ஒளி ஊறு என்னும் பண்புகளை யுடைமை தனித்தனியே துணியப்படுதலானும், அங்ஙனமே அஃது ஆன்மா மனம் என்பவற்றின் பண்பாதலும் பெறப்படா மையானும் அதனைத் தனக்கென உடைய வான் எனும் ஒரு பொருளுண்மை தெற்றெனப் பெறப்படும்; அவ்வானும் எங்கும் நிறைந்த பொருளாகலின் அது பலவாதலின்றி ஒன்றேயாதலும் துணியப்படும். இனி, முன் பின் உடன் நிகழ்ச்சி விரைவு விரைவின்மை முதலிய குறிகளுக்கு இடமாயிருத்தலிற் காலம் என்பதும் ஓர் உள் பொருளே யாமென்றுணரற்பாற்று; இம் முன் பின் முதலான வழக்கு ஓரிடத்தன்றி எவ்விடத்தும் நிகழக் காண்டலின் இவற்றிற்குக் காரணமாகிய காலமும் பலவாத லின்றி ஒன்றே யாமென்பதுந் துணியப்படும்; அக்காலந்தான் நிலையுதல் உடை ய பொருட்குக் காரணமாகாது, அஃதில்லாப் பொருள்கட்குக் காரணமாவதாம். இனி, இஃது அதற்குக் கீழ்பால் உள்ளது. அஃது இதற்கு மேல்பால் உள்ளது. இஃது அதற்கு வடக்கண் உள்ளது. அஃது இதற்கு தெற்கண் உள்ளது என்றற் றொடக்கத்து வழக்குகளுக்குக் காரணமாவதோர் உள்பொருளின் இருப்பு இன்றியமையாது வேண்டப் படுமாகலின் அதுவே திசை யாமென அறியற் பாற்று என்பர்.

னி, இவர் உயிரின் இருப்பு இயல்புகளைப் பற்றிக் கூறுவன வருமாறு: மெய் வாய் கண் மூக்குக் செவிகளால் அறியப்படும் ஐம்புலன்களும் அவ் வைம்பொறிகளின் வேறாய் நிற்றல் எல்லாரானும் உணரப்படுதலின், அதுபோல் ஐம்பொறி களினும் விரவி நின்று அவற்றையறிவும் உயிரும் அவ்வைம் பொறியினும் அவற்றாற்கவரப்படும் ஐம்புலன்களினும்

வேறாதல் இனிது பெறப்படும். அற்றன்று, ஐம்புலவுணர்ச்சி நிகழ் தற்கு ஐம்பொறிகளும் அவை தமக்கு இருப்பிடமாகிய உடம்புமே காரணமாயிருத்தலின் இவற்றின் வேறாக ஓர் உயிர் உண்டெனக் கோடல் மிகையாமாலெனின், நன்று கூறினாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/239&oldid=1589472" இலிருந்து மீள்விக்கப்பட்டது