உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

205

என்னும் அறுவகைச் சொற் பொருள்களின் ஒற்றுமை வேற்றுமைகளை அறியும் அறிவால் துன்பநீக்கம் உண்டாம் என்பர். இவ்வறு வகைச் சொற்பொருள்களின் இல்லாமை யாகிய அபாவம் என்பதொன்று கூட்டிச் சொற்பொருள் ஏழென்றலும் வைசேடிக நூலார்க்கு உடன்பாடு. இவற்றுட் பொருளெனப்படுவது நிலம் நீர் தீ வளி வெளி காலம் திசை உயிர் மனம் என ஒன்பது வகைத்து; பண்பெனப்படுவது ஒளி சுவை நாற்றம் ஊறு எண் அளவு வேறுபாடு புணர்ப்பு பிரிவு முன் பின் அறிவு இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி எனப் பலவகைத்தாம்; தொழிலெனப் படுவது எழுதல் விழுதல் கருங்கல் விரிதல் இயங்கல் எனப் பல வகைத்து; பொது வியல்பென்பது மிகுதியின் இருப்பதூஉங் குறைவின் இருப்பதூஉம் என இருபகுதித்து; சிறப்பியல்பென்பது முடி வாய் என்றுமுள்ள பொருள்களான பரமாணுக்களின் மட்டும் இருப்பது; தற்கிழமை என்பது பிரிவின்றி என்றுமுள்ள இயைபு, அஃது உறுப்பு உறுப்பிகட்கும் பண்பு பண்பிகட்கும், வினை வினைமுதல்கட்கும் உளதாவ தொரு நீக்கமில் இயைபு; இன்மை யென்பது பண்புந் தொழிலும் பொருந்தாமையான் முன் இல்லாதது; என்று எழுகூற்றினையும் விளக்குவர்.

இனி இவர்தங் கோட்பாடுகளுட் சிலவருமாறு: நிலம், நீர், தீ, வளி, வான், காலம், திசை, ஆன்மா, மனம் என்னும் ஒன்பதும் உள்பொரு ளென்பர். இவ்வொன்பதின் வேறாகிய இருளைச் சாங்கிய நூலாரும் பட்டமீமாஞ்சகரும் வேதாந்திகளும் ஓர் உள் பொருளென்றே கொள்ளாநிற்ப, இவர் ஒளியினது இன்மையே இருளெனப்படுவதன்றி அஃது ஓர் உள்பொருளா மாறில்லை யென் றுரைப்பர். ஓர் உள் பொருளின் இலக்கணமாவது பண்புந் தொழிலும் நீக்க மின்றி இருத்தற்கு இடமாவதாம். இனிக் காரணம் இல்வழிக் காரியம் இல்லை யாதல்போலக், காரியம் இல்வழிக் காரணமும் இல்லை யென்றுரைத்தல் அடாது; என்னை? மண்ணும் கோல் திகிரிகளுங் குயவனும் இல்வழிக் குடந்தோன்றாமை கண்டாம்; அங்ஙனமே, குடம் இல்வழி அதற்குக் காரணமாகிய மண் முதலியனவும் இல்லையென்று ரைத்தல் பொருந்தாதாகலின். இனி, ஒரு பொருளின் இருப்பு அப்பொருளின் வேறாவதாம்; அங்ஙனமே, குடம் இல்வழி அதற்குக் காரணமாகிய மண் முதலியனவும் இல்லையென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/238&oldid=1589471" இலிருந்து மீள்விக்கப்பட்டது