உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் 25

என்றுமுள்ள பொருளாகாதெனின், நன்று சொன்னாய், மகவின் மாட்டுக் காணப்படும் அவா அது மேலைப் பிறவிக்கண் நுகர்ந்த பொருட் பயனாய் அதன்கண் எஞ்சி நின்ற நினைவுகளால் உண்டாவதாகலின் உயிர் என்றுமுள்ள பொருள் என்னும் உண்மை மறுக்கப்படாதென்க.

இனி உயிர்கட்கு உறையுளாய் வரும் உடம்பு அறிவில் பொருளாகிய மண்ணேயாமென்றும், மேலைப்பிறவியிற்செய்த இருவினைக் கீடாக உடம்புகள் உண்டாமென்றும், இருவினை நுகர்ச்சி ஒழிந்த வளவானே உயிர் உடம்பைவிட்டு நீங்கு மென்றும், உடம்பு உலகுகட்கு முதலாவன அறிவில் பொருளாயும் உயிர் அறிவுப் பொருளாயுமிருத்தலின் அவை யிரண்டும் வெவ்வேறியல்பினவாமென்றும், உயிர் என்றும் உளதாகலின் அது மறித்தும் மறித்தும் பிறவி எடுக்குமென்றும், அவரவர் செய்த வினைகட்கு இயைய இறைவனே அவற்றின் பயன்களை உயிர்கட்கு நுகர்விப்பனென்றும், உள்பொருள் இ பாருட்கணின்று தோன்றல் இயலாமையாற் காரியப் பாருள்கள் கெட்ட வழிக் காரணப் பொருளாய் நிலை பெறுமென்றும், பிறவித் துன்பங்கள் பலவாயிருத்தலிற் பிறவி யெடுத்தல் துன்பமேயாமென்றும், என்றாலும் இடையிடையே இன்பம் உளதென்பது மறுக்கப்படாதென்றும், துறவுபூண்டு வீட் ட்டினைத் தலைப்படுவார்க்குத் துன்பங்கள் அறவே தொலைய இன்பம் உண்டாமென்றும் வழூஉக்களின் காரணங் களை உள்ளவாறுணர்தலாற் செருக்கு அறு மென்றும், தவ முயற்சியான் உயிர் தூயதாமென்றும், வீடுபேற்றைக் காதலிப்பா ரெல்லாம் அறிவு நூல்களை ஓதிக் கற்றாரோடு உசாவித் தெளிதல் வேண்டு மென்றும் நையாயிகர் வற்புறுத்துப. இவர், பரமாணுக்கள் பகுக்கப் படாதனவாய், அறிவில் பொருள்கட் கல்லாம் முதலாய் என்றும் நிலைபெறுமென நிறுவுவர். நியாய நூலார் தழூஉங் கோட்பாடுகளிற் பெரும்பாலன நியாயநூலார் சைவசித்தாந்தத்திற்கு உடம்பாடாதல் காண்க.

இனி, வைசேடிகர் கூறுவன வெல்லாம் நையாயிகர் உரைப் பொருளோடு முழுதொக்குமாயினும், அவர் அவற்றை விளக்கு மாற்றின்கட் சிற்சில வேறுபாடுகள் உண்மையின் அவர் கூறும் பொருளும் ஈண்டொருசிறிது காட்டுதும். பொருள், பண்பு, தொழில், பொதுவியல்பு, சிறப்பியல்பு, தற்கிழமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/237&oldid=1589470" இலிருந்து மீள்விக்கப்பட்டது