உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலர்

-

முதிர்ச்சி.

-

திருவாசக விரிவுரை

247

பேரன்பு உடையோர். காதலாவது அன்பின்

எய்ப்பு இளைப்பு; இப்பொருட்டாதல் “எய்த்த மெய்யேன் எய்யேனாகி" என்புழியும் (பொருநராற்றுப்படை68)

காண்க,

வறுமையால் நலிந்து நாளைக்கு என்செய்வேம் என்றிருப்பார்க்குச் சடுதியிற்கிடைத்த புதையற்பொருள் அவரது வறுமை தீர்த்து அவர்க்கு வேண்டுவவெல்லாம் அளித்தல் போல, இருவினையெச்சத்தால் நலிந்து போதரும் அன்பர்க்கு அவ்வெச்சத்தையுந் தொலைத்துத் தனது பேரின்பப் பெருஞ் செல்வத்தை வழங்குதலின் இறைவனை “எய்ப்பினில் வைப்பு” என்றருளிச் செய்தார்.

கேவலத்தில் இறைவன் கூத்தியற்றுங்கால், ஆண்டு அவனோடு உடனிருந்து அதனைக் காண்பாள் உமைப் பிராட்டியேயாகலிற் ‘கூரிருட் கூத்தொடு குனிப்போன்' என்பதனை அடுக்கப் பேரமைத் தோளி காதலன் என்பதனை வைத்தோதினார். கேவலத்தின் இறைவன் ஆடுங் கூத்தை இறைவி ஒருத்தியே உடனிருந்து காண்பா ளென்பதற்குப் பண்டைக் காலத்ததாகிய கலித்தொகையுட் போந்த

“பாணியுந் தூக்குஞ் சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப

ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி

என்னுஞ் சுரிதகப் பாட்டுச் (கலித்தொகை கடவுள் வாழ்த்து) சான்றாதல் காண்க.

இனி ஏதிலர்க்கு எட்டாமல் அகன்றுநிற்ப னாயினுங் காதலர்க்கு அணுக்கனாய் உற்றுழியுதவுவான் என்பது தெரிப்பார் அவ்விரண்டையும் ஒருங்குவைத் துரைத்தருளினா ரென்க.

நச்சர வாட்டிய நம்பன் போற்றி,

பிச்செமை ஏற்றிய பெரியோன் போற்றி,

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை

நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/280&oldid=1589520" இலிருந்து மீள்விக்கப்பட்டது