உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

  • மறைமலையம் - 25

தருதலிற் ‘சூழ் இருந் துன்பம்' என்றருளிச் செய்தார்; கருத்துப்

"பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று

வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் சேர்ந்த கிழவனை நாடிக் கொளற்கு

என்னும் பழைய நாலடியார் செய்யுளினுங் காண்க.

&

க்

•46

ஆர் அமுது’ அரிய அமுது; அருமை என்னும் பண்புப் பெயர் ஆர் எனத் திரிந்தது; ஈண்டு அரிய அமுதாவது தனது திருவடிப் பேரின்பமேயா மென்க.

'கூரிருட் கூத்தொடு குனிப்போன்' என்றது உயிர்கள் தம் அறிவு செயல் வேட்கைகள் ஒடுங்கிக் கேவல நிலையில் ஆணவ வல்லிருளில் இடையிடையே அழுந்திக் கிடக்குங் காலத்தும், இறைவன் அவர் பொருட்டுச் செய்யும் ஐந்தொழிற் கூத்தை ஓவாது இயற்றுவான் என்பதை அறிவித்த வாறாம்; மேலும், “நள்ளிருளில் நட்டம் பயின்றாடுநாதனே" என்றருளிச் செய்தார்.

குனித்தல் - வளைந்தாடுதல்; ‘குனிவு’ வளைவுப் பொருட் டாதல் “குனிகொள்பாக வெண்மதி” என்புழிக் (சீவகசிந்தாமணி 704) காண்க. கூத்தொடு குனித்தலாவது நிமிர்ந்தாடுதற் கிடையே வளைந்தாடுதல்.

அமை - மூங்கில்; இது பிராட்டியாரின் தோளுக்கு உவமம்.

66

ஏதிலர் - இயைபில்லாதவர், 'ஏது’ இயைபு எனப் பொருள் படுதலை 'ஏதில் பிணம் என்பதற்கு (திருக்குறள் 913) "இயைபில்லாததோர் பிணம்” எனப் பரிமேலழகியார் உரை கூறியவாற்றாற் காண்க. தன்பால் அன்பால் இயைபுறாதாரைக் தானும் இறைவதின்றி இறைவன் அகன்று நிற்பான் என்றவாறாயிற்று. அற்றேல், யாண்டும் நிறைந்து நிற்கும் இறைவன் ஏதிலர்பால் இலனாம் என்று உரைப்பின் அஃதவற்கு இழுக்காமா லெனின்; அற்றன்று அன்பால் விரிந்த உள்ளத்தில் முறுக்கவிழ்ந்த மலரின் மணம் போன்றும், அஃதின்றிக் குவிந்த உள்ளத்துள் முகையுள் மணம் போன்றும் இருப்பனாகலின், ஏதிலர்பாற் புலப்படாது நிற்றல் பற்றி அங்ஙனங் கூறுதல் பொருந்தாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/279&oldid=1589518" இலிருந்து மீள்விக்கப்பட்டது