உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திருவாசக விரிவுரை

அடைந்தார்க்கு

-

245

தன்னைவந்து அரிய அமுதினைக் கொடுப்பவன் வாழ்க, கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க மிக்க இருளின்கண் இயற்றுங் கூத்துடன் குனிந்தாடுவோன் வாழ்க, வேர் அமைத்தோளி காதலன் வாழ்க பெரிய மூங்கிலை யொத்த தோளினையுடைய உமைப்பிராட்டி யாரின் கணவன் வாழ்க, ஏதிலர்க்கு ஏதுஇல்எம் இறைவன் வாழ்க - அன்பால் இயைபு உறாதவர்க்கு இயைபில்லாதவனான எம் இறைவன் வாழ்க, காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க -அன்பரா யினார்க்கு இளைப்பின்கட் பயன்படச் சேர்த்து வைத்த பொருள் போல்வான் வாழ்க என்றவாறு.

‘பணம்’ அரவின்படம் எனப் பொருள்படுவதொரு வட சொல்; அஃது ஈண்டுச் சினையாகு பெயராய்ப் பாம்பினை உணர்த்தாநின்றது. இறைவற்குப் பாம்பு ஓர் அரைக்கச்சையாம் என்றது: இறைவன் உலகங்களைத் தோற்றுவிப்பான் வேண்டிச் சுத்தமாயையைக் கலக்க, ஆண்டு அதன்கட் பாம்பு மண்டலித் தாற் போலுஞ் சுழல் சுழலான ஓர் இயக்கம் உண்டாம்; அவ்வியக்கம் இறைவனையே ஒரு பற்றுக் கோடாகக் கொண்ட நடைபெறுதலின் அஃது அவற்கு அரைக்கச்சுப் போலாம் என்று உணர்த்தியபடியாம்.

கச்சை - அரைப்பட்டிகை; திவாகரம்.

‘அச்சந்தவிர்த்த சேவகன்' என்பது பாண்டியன் கொண்ட அச்சந்தீர்த்தற்பொருட்டு இறைவன் போர்க்களத்தே போர் வீரனாய்த் தோன்றியபடியை அறிவித்தது; அவ்வரலாறு மேலே காட்டினாம் ஆண்டுக் கண்டு கொள்க.

சேவகன் - போர்வீரன்.

‘நிச்சல்' என்பது நித்யம் என்னும் வடசொற்றிரிபு.

அன்பராயினாரைப் பதம் அறிந்துவந்து வலிந்திழுத்து ஆட்கொள்ளும் அருளுடையான் என்ப துணர்த்துவார் 'ஈர்த்தாட்கொள்வோன்' என்றும், அங்ஙனம் அருள்செய்வதும் ஒரு காலத்தன்றி எக்காலத்துமா மென்பார் ‘நிச்சலும்' என்றும் அருளிச் செய்தார்.

மேலைப்பிறவிகளிற் செய்த தீவினைகள் அவை செய்தானை அவனறியாமலே வந்து இப்பிறவிக்கட் சூழ்ந்துகொண்டு துன்பந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/278&oldid=1589517" இலிருந்து மீள்விக்கப்பட்டது