உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் 25

இருவினை மாமரம் வேர்பறித்தெழுந்து, அருள் நீர் ஓட்டா, வரைச்சந்தின் சிறைகட்டிக், குளவாய் கோலி, வண்டுடைக் குளத்தின் மீக்கொள என வினை முடிவு செய்க.

'மகிழ்தலின் நோக்கி' என்பதில் நோக்கி என்னும் வினைக்கு முதல் தொண்ட உழவர் என்பதாம்.

தொண்டராகிய உழவர் அங்ஙனம் போந்த இன்ப வெள்ளத்தினைத் தமது வழிபாடாகிய வயலுள் நிரப்பித் தமது பேரன்பாகிய வித்தினை அதன்கண் விதைத்து அதன் பயனான சிவபோகத்தினை நுகருமாறு இறைவன் செய்த அருட்டிறத்தை விரித்தெடுத் தருளிச் செய்தாரென்க.

அண்டம்வெளி;

அண்டம் - வெளி; இங்கது அருள்வெளியினை உணர்த்தா நின்றது. இச்சொல் வான்வெளியினை யுணர்த்தல் திவாகரத் துட் காண்க.

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க! அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க!

அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க!

நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க! 100 சூழ்இருந் துன்பந் துடைப்போன் வாழ்க! எய்தினர்க் காரமுது அளிப்போன் வாழ்க! கூர்இருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க! பேர்அமைந் தோளி காதலன் வாழ்க! ஏதிலர்க் கேதில்எம் இறைவன் வாழ்க!

105 காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க!

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க - கரியபடத்தினை யுடைய பாம்பை அரைக்கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க, அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க -அரிய தவத்தை முடிந்த வர்கட்கு அருள் செய்யும் முதல்வன் வாழ்க, அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க -அச்சத்தை நீக்கிய போர்வீரன் வாழ்க, நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க - எப்போதும் வலிந்திழுத்து அடிமை கொள்வோன் வாழ்க, சூழ்இருந் துன்பம் துடைப்போன் வாழ்க - உயிரைவந்து சூழும் பெரிய வினைத் துன்பத்தைப் பற்றத் தீர்ப்பவன் வாழ்க, எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/277&oldid=1589516" இலிருந்து மீள்விக்கப்பட்டது