உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

243

நிலை திரியாத மலையினியற்கையை ஒப்பதாயிற்று. மலையின் கண் வளர்ந்த சந்தனமரம் திட்பமும் தூய்மையும் நறுமணமும் உடையதாதல் போல, மெய்யடியார் உள்ளமும் திட்பம் தூய்மை நறுமணம் என்னும் இவ்வியல்புகள் உடைத்தா. ஆகவே, இறைவனருளிய பேரின்ப வெள்ளம் மெய்யடியார் உள்ளத் தளவிற் றடைப்பட்டு நிற்குமென்று அறியற்பாற்று.

னி ‘அருவரைச்சந்து' என்பதற்கு அரிய மலையின்கண் உள்ள பிளவு என்று உரைப்பாரும் உளர்; அப்பொருள் சிறவாமை கண்டு கொள்க.

'மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி' என்பது வெள்ளம் பெருகிச் சென்று குளங்களை வளைத்தல் போலப், பேரின்பமும் மெய்யன்பர் உள்ளங்களாகிய வாவிகளை வளைக்குமென உணர்த்தியபடியாம்.

கோலல் - வளைத்தல்; “அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே" என்புழியும் (பரிபாடல் 18) இப்பொருட்டாதல்

காண்க.

'நிறை அகில் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள' என்பது புது வெள்ளத்தால் நிறைந்த குளங்களிலே மாதரார் தலைமுழுகிக் கரையேறி அதன்கட் டமது கூந்தலின் ஈரம் புலர்த்துதல் வேண்டி அகில் புகைத்தல் போலப், பேரின்ப வெள்ளம் நிறையப்பெற்ற தமது உள்ளத்திற் றோய்ந்தெழுந்த நினைவினையே மெய்யடியார் நோக்கிய படியா யிருப்பாரென அறிவித்தவா றாயிற்று. நீரிற்றோய்ந்த கூந்தல் மாசு நீங்கித் தூயதாதல் போல, இன்பத்திற் றோய்ந்த நினைவும் மலமாசு நீங்கித் தூயதாம் என்பதூஉம் உய்த்துணரற் பாற்று.

‘மீக்கொள’ என்பது காறும் ‘அதுவே' என்பதன் வினை ஆனந்தப்பழங்கடல் அது முகிலிற்றோன்றி, வரையில் ஏறி, மின்னொளி விரிய, வாளரவு இரியக், கோடை தலைகரப்பத் தோன்றி ஒளி மிளிரக் கோபம் மிகுத்து, முரசு எறிந்து, கருணையின் முழங்கி, அஞ்சலி காந்தள் காட்ட, அருள் நுண் துளி கொள்ள, வெள்ளந் தெவிட்டக், குட்டங் கையற ஓங்கிப் பேய்த் தேரினை மான்கணம் பருகித் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை, யாற்று அகவயிற் பாய்ந்தெழுந்து சுழிகொழித்துச் சுழித்து, எம் பந்தக் கரை பொருது அலைத்து இடித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/276&oldid=1589515" இலிருந்து மீள்விக்கப்பட்டது