உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் 25

வெள்ளப் பெருக்கினாற் றாக்குண்டு கரைகள் இடிதல் போலப் பேரின்பப் பெருக்காலும் பந்தம் என்னும் மலக்கட்டுச் சிதையும் என்பார் ‘பந்த மாக்கரை பொருதலைத்து இடித்து’ என்றருளிச் செய்தார்.

பொருதல் - முட்டுதல்; “விண்பொரு புகழ்" என்றார் புறத்தினும் (புறநானூறு 11)

66

ஊழ்

ஊழ்

ஊழ் முறை; இப்பொருட்டாதல் முயங்குங்காலே” என்பதன் உரையிற் காண்க. (புறப்பொருள் வெண்பாமாலை 11 2)

பெருவெள்ளம் பெருகினால் அஃது ஓடும் வழியிடையே நின்ற மரங்களை வேரோடும் பெயர்த்துக் கொண்டு செல்லுதல் போலப்,பேரின்பப் பெருக்கும் உயிர்களுள்ளத்திற் பெருகுங்கால் ஆண்டு நின்ற இருவினைகளை அடியோடு பெயர்த் தெளியு மாதலின் 'இருவினை மாமரம் வேர் பறித்தெழுந்து என்றருளினார்.

66

""

உருவ அருணீர் ஓட்டா' என்பது பேரின்பமும் பேரருளும் இறைவற்குரிய பண்புகளாகலின், அவன் உயிர்கட்கு இன்பத் தினைத் தருதல் அவர் மாட்டு வைத்த அருள்பற்றியேயாம்; ஆகவே அவ்வின்பத்திற்கு முன் இறைவன் அருளினைச் செலுத்துதல் அறிவித்தபடி யாயிற்று. 'அருள் நீர்' அருள் நீர்மையென மற்றொரு பொருளு முரைத்துக் கொள்க.

உருவ அழகிய; “உருவக்குதிரை மழவரோட்டிய” என்புழிப் போல உரு என்னும் உரிச்சொல் ஒரோவழி வடிவழகையும் உணர்ந்துமென்பர் நச்சினார்க்கினியர்.(தொல்காப்பியம் சொல்

302)

அருவரைச் சந்தின் வான் சிறைகட்டி’ என்பது நிலை திரியாத மலைகளில் வளர்ந்த சந்தன மரங்களால் அணைகட்டி வெள்ளப் பெருக்குத் தானே தனக்கொரு தடையினை ஆக்கிக் கொள்ளுதல்போலப், பேரின்பப் பெருக்கும் நிலைதிரியாத இயல்பினையுடைய தூயவுள்ளத்தின்கட் L டைப்பட்டு நிற்குமெனக் கூறினார்.“நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம். மலையினும் மாணப் பெரிது" என்பவாகலின், இறைவன் மாட்டுச் செலுத்தும் அன்பின்கண் ஈடுபட்டு நின்று, அந் நிலையினின்றுஞ் சிறிதும் பெயராத மெய்யடியார் இயற்கை,

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/275&oldid=1589514" இலிருந்து மீள்விக்கப்பட்டது