உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவம்

-

திருவாசக விரிவுரை

241

கேடு; இச்சொல் இப்பொருட்டாதல் “அவஞ் செய்வா ராசையுட்பட்டு” என்பதனுரையிற் (திருக்குறள் 266)

காண்க.

‘தாபம்’ விடாய் எனப் பொருள்படும் ஒரு வடசொல்.

அசைதல் - வருந்துதல் ‘களனுழந் தசைஇய' என்புழியும் (புறநானூறு 97) ப்பொருட்டாதல் காண்க.

அவ்வாறு அறுவகைச் சமயத்துட்பட்டோரும் உண்மையான வீடு பேற்றின்பத்தினையும், அதுதரும் ஒரு முழுமுதற் கடவுளையும் அறியாது மயங்கி நிற்ப, தன்னை அடைந்த மெய்யன்பர்க்குத் தன் அருட்பெருக்கினையும் தந்து தனது உண்மை நிலையினையும் இறைவன் புலப்படுத்தும் முறை ‘ஆயிடை வானப் பேரியாற்று' என்பது துவங்கிக் ‘குளத்தின் மீக்கொௗ' என்பதுகாறுங் கூறியருளினார்.

அ இடை என்னும் இரு சொற்களில் முதல் நின்ற அகரச் சுட்டு ஆ என நீண்டது; இவ்வாறு சுட்டு நீளுதல் “நீடவருதலுஞ் செய்யுளுள் உரித்தே” என்பதனாற் காண்க. (தொல்காப்பியம் எழுத்து 208)

அ டை - அவ் அவ் இ

டம்.

'வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந்து' என்பது வானின்கண் நுண்ணியவடிவில் நின்ற நீராவியினூடே குளிருங் கால் உருவிவீசிய அளவானே, அஃது உறைந்து மழைத் துளிகளாய்க் கீழ் விழுதல்போல, இறைவனும் தனது அறிவு வெளியினூடேநிறைந்த அருளாவியிற் றோய்ந்து அதனைத் தன்னடியார்க்குப் புலப்படப் பொழியு மாற்றினை உணர்த்திய

படியாம்.

அகம்- உள், வயின் - இடம்.

கொழித்தல் - தெள்ளுதல்; “நன் பொன்மணி நிறங்கிளரப் பொன் கொழியா” என்றார் திருமுருகாற்றுப்படையினும்.

இன்பப் பெருஞ்சுழி கொழித்த’ லாவது யாற்றின் கண் நீர் மிகப்பெரிய வளவானே அஃது ஆழும் மிகுதியும் உடைத்தாய்ச் கழித்துச் செல்லுதல் போலப், பேரின்பம் பெருகிய வளவானே தூயவுயிர்கள் எல்லாவற்றையுந் தன்னகப்படுத்தி இயங்கு வதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/274&oldid=1589512" இலிருந்து மீள்விக்கப்பட்டது