உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

தெவிட்ட

-

மறைமலையம் - 25

திரள; இச்சொல் இப்பொருட்டாதலை ‘மான் கணம் மரமுதற்றெவிட்ட' (குறிஞ்சிப்பாட்டு 214) என்புழிக் காண்க.

‘கேதக்குட்டம் கையற ஓங்கி' என்பது மழைவெள்ளம் பெருகாவழித் தனித்தனியே நின்று விலங்குகளையும் ஆட்க ளையுந் தங்கண் வீழ்த்தி மடிவித்த குட்டங்கள் அவ்வெள்ளம் பெருகிய வழி எல்லாம் அவ்வெள்ளத்தின்கண் அமிழ்ந்தித் தஞ்செயலற்றுப் போதல்போல, உயிர்களை வருத்திவரும் துன்பமாகிய குட்டங்களும் அருள்வெள்ளம் பெருகிய வழி அதன்கண் ஆர்ந்து தஞ் செயலற்றுப் போமென்று உணர்த்திய படியாம்.

-

கேதம் - துன்பம்; குட்டம் - வாவி; இச்சொற்கள் இப் பாருள்படுதலைத் திவாகரத்துட்காண்க.

கையறுதல் - செயலறுதல்; “மையன்மாலையாங் கையாறு பினைய” என்றார் புறத்திலும் (புறநானூறு 67)

இருமுச்சமயத் தொருபாய்த் தேரினை, நீர்நசை தரவரும் நெருங்கண் மான்கணந், தவப்பெருவாயிடைப் பருகித் தளர் வாடும், அவப்பெருந்தாபம் நீங்காதசைந்தன' என்பது நீர் வேட்கையான் நாவறண்டு தண்புனலைத் தேடிவரும் மான் மந்தைகள் உண்மையான நீரினைப் பெறாமல் வேனில் வெப்பத்தால் நீர் போற் றோன்றுங் கானல் நீரினைப் பருகுதற்கு விரைந்து சென்று நீரினைப் பெறாமல் எய்த்தல் போல, அறுவகைச் சமயத்தில் நின்றோரும் அவை தம்மால் நுவலப் படும் உண்மையல்லாத வீடுபேற் றின்பத்தினைப் பெறவிழைந்து தம் வாழ்நாள் முடியுங்காறும் முயன்று முயன்று பொய்த் தோற்றமாய் ஒழிந்த அவ்வின்பத்தினைப் பெறாமல் இறுதியில் எல்லையற்ற துன்பத்தினை உழக்குமாறு அருளியதாம்.

அடிகள் குறிப்பிட்ட அறுவகைச் சமயங்களாவன இவை என்பதை மேலே விரித்துக் காட்டினாம்.

வறட்சியால் வாய்திறந்தபடியே யிருத்தலின் 'தவப் பெருவாய்' என்றார். 'தவ' மிகுதிப்பொருளை உணர்த்தும் ஓர் உரிச்சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/273&oldid=1589511" இலிருந்து மீள்விக்கப்பட்டது