உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

239

ஈண்டுப் ‘புலம்' புலங்கள்மேற் செல்லும் அவாக்களுக்கு ஆயின. இஃது ஆகுபெயர்.

இரிய கெட; இப்பொருட்டாதல் "இகல் இரிய" என்பதன் (புறப்பொருள் வெண்பா மாலை 914) உரையிற் காண்க. கார்காலந் தோன்றியவுடன் வேனிற்கால வெப்பம் முற்றும் மறைதல்பற்றி ‘வெந்துயர்க் கோடை மாத்தரைகரப்ப என்றார். ஈண்டு அருண்மழைக்கு முன் மறைவது பிறவித்துன்பமாகிய கோடைய யாம் என்க.

'தோன்றி' செங்காந்தள் என்பர் திவாகரத்தில்; இது கார்காலத்திற் பூக்கும் என்பது 'தோடார் தோன்றி குருதி பூப்ப என்னும் முல்லைப் பாட்டினால் அறியப்படும். இது மிகச் து சிவந்த பூக்களை யுடையது. குருவடிவிற் றோன்றிய இறைவன் அஞ்சேல் என்று தூக்கிய திருக்கையை அடிகள் ஈண்டுத் தோன்றிமலர் எனக்கூறினர் போலும்.

பட்டுப்போன்ற மல்லிய உடம்பும் அதன்கண் மிகச்சிவந்த நிறமும் வாய்ந்த இந்திரகோப மென்னுந் தம்பலப்பூச்சிகள் கார்காலத்தில் நிலத்தின்கட் டோன்றுதல் இயல்பாகலின், அவற்றையும் அடிகள் ஈண்டுக் குறித்தருளினார். அடியார் முன்னெடுத்துப் போந்த எண்ணிறந்த பிறவிகளே ஈண்டு இந்திர கோபம் எனப்பட்டன.

கார் காலத்து முகில் முரசின் அதிர்ச்சிபோல் முழங்கு தலின் ‘முரசெறிந்து முழங்கி' என்றார், அருண்மழையின் முழக்கமாவது நாததத்துவத்தின் ஒலியேயாம்; மேலே “நாதப் பெரும்பறை நவின்று கறங்க” என்று அருளிச் செய்ததூஉங் காண்க.

காந்தளுங் கார்காலத்துப் பூவாதலின் 'பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட' என்றார்; ஈண்டு அருண்மழையிற் காந்தா ளாவது அடியார்கூப்புங் கைகளேயாம்.

இனி, அடிகட்குப் புலப்பட்டுத் தோன்றிய அருளே அம் முகிலிற்றோன்றிய நுண்ணிய மழைத்துளிகளாகச் சொல்லப்

பட்டது.

இவ் வருண்முகிலிற்றோன்றிய வெள்ளமானது எத்திசை யிலுள்ள எவ்வுயிர்கட்குந் தானே சென்று பயன்படுதலிற் ‘செஞ்சுடர் வெள்ளந் திசை திசை தெவிட்ட என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/272&oldid=1589510" இலிருந்து மீள்விக்கப்பட்டது