உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

249

ஒழியச் செய்த ஒண்பொருள் - மலரினின்றும் எழுந்து பரம்பிய மணம் போல ஓங்கி எங்கும்தான் இல்லாத இடம் இல்லையாம் படி நிறைந்து பொருந்திய தனது பெருந்தன்மையை இந்நாளில் ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கும் எளிதாகவந்து அருள் செய்து அழிந்துபோம் இவ்வுடம்பு நீங்குமாற செய்த ஒள்ளிய பொருளாவான், இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி இந்நாளில் அடியனேனிடத்தும் எளிதாகவந்து இருந்தவனுக்கு வணக்கம், அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி -அன்பால் உருகும் உடம்பினை அடியேற்கு அருள் செய்தவனுக்கு வணக்கம், ஊற்று இருந்து உள்ளம் களிப்போன் போற்றி - நீர் ஊற்றுப்போலிருந்து என் உள்ளத்தைக் களிக்கச் செய்வோ னுக்கு வணக்கம், ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் - பொறுத்தற்கரிய இன்ப வெள்ளம் விரிந்து அலையினை எழுப்ப அதனைப் பேண மாட்டாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன் என்றவாறு.

‘நஞ்சு அரவு?' என்னுந் தொடர்மொழி மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற் றாகும் என்பதனால் நச்சரவு (தொல்காப்பியம் எழுத்து 414) என்றாயிற்று.

'நச்சரவு ஆட்டிய நம்பன்' என்பது மணஞ்செய்து கொள்ளும் பொருட்டு தன் மனக்கினிய காதலியை அழைத்துச் சென்ற ஒருவன் திரும்புறம்பயம் என்னும் ஊர்க்கு வருகையில் அரவுதீண்டி இறக்க, அதுகண்டு அவன்றன் இளங்காதலி உளம் பெரிதுங் கலங்கி இறைவனை நினைந்துருகி அழ, ஐயன் அவட்கு இரங்கி ஒரு பாம்பாட்டியாய் அங்குப் போந்து பாம்பினை ஆட்டி அவற்கு அந்நஞ்சினைத் தீர்த்து அவனை உயிர் பெற்றெழச் செய்தமையினைக் குறிப்பது. திருப்புறம்பயத்தில் அரசின்நஞ்சு தீர்த்தவன் சிவபிரானேயாக, இஃதறியாத திருவிளையாடற் புராண ஆசிரியர் இருவரும் அதனைத் திருஞானசம்பந்தப் பெருமான் மேலேற்றி இழுக்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் அரவின் நஞ்சு தீர்த்தது திருமருகலிற் போந்த காதலர் வேறிருவரில் ஒருவற்கேயாம்.

‘நம்பன்’ என்னுஞ் சொல் நம்பி என்னுஞ் சொற்போல நம் என்னும் முதனிலையிற் றோன்றி உயர்வுப் பொருளைத் தருவது. உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் “நம்பி நம்முதனிலையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/282&oldid=1589522" இலிருந்து மீள்விக்கப்பட்டது