உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

25*

மறைமலையம் - 25

நமக்கு இன்னானென்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிக் சொல்” என்பர்.(சீவகசிந்தாமணி 1909)

‘பிச்செமை ஏற்றிய பெரியோன்' என்றது பிறிது எந்நினைவுமின்றி இறைவனது அருட்டிறம் ஒன்றனை நினைந்திருக்குமாறு தம்மைச் செய்தமை தெரிவித்தவாறாம். ‘பிச்சு’ பித்த என்னும் வடசொற் றிரிபு.

காணவுங் கருதவும் படாத தனதுஅருளுருவினை காணவுங் கருதவு மாம்படி அத்துணை எளிதாக்கித் தோன்றச் செய்தல் பெரியதொரு வல்லமையா மென்பார், 'நீற்றொடு தோற்ற வல்லோன்' என்றார்.

அரவினை ஆட்டி அதன் நஞ்சை இறக்குவோன், பின்னர்ப் பித்தாகிய நஞ்சை எனக்கு ஏறச் செய்தது ஒரு வியப்பென்பார் அவ்விரண்டனையும் ஒருங்குவைத்தோதி, அதன்பின் அவனது அளவி லாற்றலுக்கு ஓர் அடையாளமாக அவன் தனது அருளுருவினைத் தங் கட்புல னெதிரே தோற்றுவித்தமை சிறந்தெடுத்துக் கூறி, அதன் பின்னர்ப் பொதுவான அவனது பேராற்றற்கு அடையாளமாக ஆண்டாண்டு நடைபெறுவன வற்றை அருளிச் செய்தார்.

‘நடாஅய்' ‘கிடாஅய்’ என்னும் அளபெடைகள் செய்யு ளிசை நிறைத்தற்கும், 'நிறிஇ' என்பது அதனோடு சொல்லிசை நிறைத்தற்கும் வந்தன; இவ்விருவகையும்

66

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்

வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற் கறிவு’

என்னும் நாலடியார் செய்யுளிற் போந்தமை காண்க.

பதம் - தரம்; இச்சொல் இப்பொருட்டாதலை மேலே விளக்கினாம்.

புலன் - பொறியுணர்ச்சி; ஐம்பொறிகள்: மெய் வாய் கண் மூக்கு செவி என்பன; ஐம்புலன்கள்: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/283&oldid=1589523" இலிருந்து மீள்விக்கப்பட்டது