உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

விண்முதற்பூதம்: வான் வளி தீ நீர் மண் என்பன.

251

மலரின்கண் எழுந்த நறுமணம் தான் நிரம்புமிட னல்லாம் தான் உண்டென்பதனைப் பிறர்க் கறிவித்தலே யன்றித் தனது இனிமையால் அவர்க்கு இன்பத்தினையுந் தருதல்போல, இறைவனுந் தான் நிறைந்திருக்கும் இடங்களினும் உயிர்களினுமெல்லாந் தான் உண்டென்பதனை விளங்க் காட்டுதலோடு தன்னைக் காண்பார்க்குப் பேரின்பத்தினையும் ஊட்டுவானென உவமையையும் பொருளையும் பொருத்திக்

கொள்க.

யாண்டும் நிறைந்த இறைவன் ஓரிடத்துள்ளான்போல ஒரு மாநுடவடிவில் எளியனாய்ப் போந்தானேனும், அழியுமியல் பிற்றாகிய இவ்வூனுடம்பின் றன்மையை நீக்கித் தனது பேராற்றலைப் புலப்படுத்தினா னென்பார் ‘மேவிய பெருமை இன்றெனக் கெளி வந்தருளி, அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்' என்றருளிச் செய்தார்.

யாக்கை - எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டது; அஃது‘ஆக்கை' என மருவிற்று.

அளிதரும் - அறக்கனியும்; ஈண்டு அன்பினால் மிகக் குழையும் என்னும் பொருட்டாம்; இச்சொல் இப்பொருட்டா தலை “மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமுந் தாம்பழுத் தளிந்தன” என்னுஞ் சூளாமணிப் பாட்டின்கட் காண்க.

6

அளிதரும் ஆக்கை செய்தோன்' என்பது ஊனுடம்பை அதன் வாலாமை நீக்கி அன்பாற் குழையும் இன்பவுடம்பாக்கித் தமக்கருள்செய்த பான்மை கூறினார்.

இனி, உள்ளத்தைப் பற்றியிருந்த மலமாசு நீங்கிப் போக அதன்கண் முன்னெல்லாம் புலப்படாது நின்ற முதல்வன் இஞ்ஞான்று புலப்பட்டுத் தோன்றித் தனது பேரின்பப் பெருக் கினை மேன்மேல் எழச் செய்வனாகலின் 'ஊற்றிருந்துள்ளங் களிப்போன்' என்றார்.

னிச், சிற்றறிவுஞ் சிற்றின்பமுமே நிகழ்தற்கிடனாய் அமைந்த இம்மக்கள் யாக்கையில் இருந்தபடியே வரையறைப் படாத பேரின்பத்தினை நுகர்தல் இயலாதாகலின் இவ்வுடம்பை யொழித்து அப்பேரின்பப் பெருக்கிற் றோய்தற்கு உள்ளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/284&oldid=1589524" இலிருந்து மீள்விக்கப்பட்டது