உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 25

வேட்கின்ற தென்பார் ‘ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப், போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்' என்றோதி யருளினார்.

புகலேன் - விரும்பேன்; இச்சொல் இப்பொருட்டாதல் "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்” என்புழிக் (புறநானூறு 31) காண்க. இஃது இப்பொருள்படுதலை அறியாதார் தாந்தாம் வேண்டியவாறுரைப்பர்.

125

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க் கொளித்தும், ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத் துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்,

130 மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தந் திரத்திற் காண்டும்என் றிருந்தோர்க் கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும், முனிவர நோக்கி நனிவரக் கௌவி ஆண்எனத் தோன்றி அலிஎனப் பெயர்ந்து

135 வாணுதற் பெண்என ஒளித்தும், சேண்வயின் ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும், ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்,

140 கண்டே பயிறொறும் இன்றே பயிறொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தாள் தளை இடுமின்

சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்

145 பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/285&oldid=1589526" இலிருந்து மீள்விக்கப்பட்டது