உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

253

-

மரகதக் குவால் மாமணிப் பிறக்கம் மின் ஒளிகொண்ட பொன் ஒளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் பச்சைமனியின் குப்பலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும் ஒன்று சேர்ந்த மின்னல் ஒளியினை உள்ளடக்கியதான ஒரு பொன்னொளி விளங்காநிற்க அதனை நான்முகனுந் திரு மாலுஞ் சென்று தேடினராகவும் அவர்க்கு அகப்படாமல் ஒளித்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் - நூல்களிற் சொல்லிய முறையால் உள்ளம் ஒன்றுபட்டு நின்று காண முயன்றோர்க்கு ஒளித்தும், ஒற்றுமைகொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்-அன்பால் ஒற்றுமை கொண்டு கருதிப் பார்க்கும் உள்ளத்தினையுடைய உற்றார் வருந்தத் தவமுயற்சியில் உறைத்து நிற்பார்க்கும் ஒளித்தும், மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு ஒளித்தும், இத்தந்திரத்திற் காண்டும் என்று இருந்தோர்க்கு அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும் - இந்த நூலின் வழியாற் காண்போம் என்று துணிந்திருந்தவர்க்கு அந்த நூலினாலேயே அவ்விடத்தில் ஒளித்தும், முனிவு அற நோக்கி நனிவரக் கெளவி ஆண் எனத் தோன்றி அலி எனப் பெயர்ந்து வாள்நுதல் பெண் என ஒளித்தும் - வெறுப்பின்றிக் கருதிப் பார்த்து அருள் மிகுதிப்படப்பற்றி ஒருகால் ஆண் என்று கருதும்படி தோன்றியும் பிரிதொருகால் அலி என்று கருதும்படி இயங்கியும் பின்னர் ஒருகால் ஒளிபொருந்திய நெற்றியினை யுடைய பெண் என்று கருதும்படி ஒளித்தும், சேண்வயின் ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும் போய்த் துற்றவை துறந்த வெறு உயிர் ஆக்கை அருநதவர் காட்சியுள் திருத்த ஒளித்தும் - தமக்குச் சேய்மைக் கண்ணே ஐம்புல அவாக்களும் செல்லுமாறு போக்கிப் பிறர் தம்மை அணுகுதற்கு அரிய மலைகடோறும் போய்த் தாம் முன்னே ஐம்புலன்களால் நுகர்ந்தவற்றை எல்லாம் அறவே விட்ட உயிர்மட்டும் நிற்கும் ஊனில்லாத வெறிய உடம்பினையுடைய செய்தற்கரிய தவத் தினைப் புரிந்தோரது தூய அறிவினுள்ளும் முற்ற ஒளித்தும்,

ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் எல்லாம்வல்ல ஒரு முழுமுதற்பொருள் உண்டோ இல்லையோ என்று மயங்கிய அறிவுக்கு ஒளித்தும், பண்டே பயில்தொறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/286&oldid=1589527" இலிருந்து மீள்விக்கப்பட்டது