உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

  • மறைமலையம் - 25

இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப்பிணையலில் தாள் தளைஇடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேல்மின் பற்றுமின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் - பழமையே பழகுந்தோறும் இந்நாளில் பழகுந்தோறும் தன்னை மறைத்துக் கொள்ளுங் கள்வனைக் கண்டு கொண்டோம் ஆதலின் வந்துநிறையுங் கோள் நிறையுங் கோள் அன்றலர்ந்த மலர்களாற் பின்னிய மாலைகளைக் கொண்டு திருவடிகளைக் கட்டுங்கோள் சுற்றுங்கோள் வளையுங்கோள் பின்றொடருங்கோள் விடாதே யுங்கோள் பிடிப்புக்கும்

6

பிடியுங்கோள் என்று கூறினவர்களது

அகப்படாமல் முழுதும் ஒளித்தும் என்றவாறு.

திருமாலும் நான்முகனுந் தம்முட்டாமே பெரியரெனத் தருக்கி மலைந்தவழி அவ்விருவரும் பெரியரல்லர்; அவரின் மேற்பட்ட முழுமுதற் கடவுளாகிய தானே அவரினும் ஏனை யெல்லாரினும் பெரியனாம் என்பதனைத் தேற்றுவிப்பான் வேண்டி இறைவன் அவர் தமக்கு நடுவே ஒரு பெரும் பொன்னொளிப் பிழம்பு வடிவினனாய்த் தோன்றி அவ்விருவ ராலுங் காண்டற்கு இயலா அடிமுடியுடையனாய்த் திகழ்ந்தன னாகலின் ‘மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசை முகன் சென்று தேடினர்க் கொளித்தும்' என்றருளிச் செய்தார்.

னி, அங்ஙனந் தோன்றிய பிழம்புவடிவு பண்பும் பண்பியும் போல் அம்மையும் அப்பனும் இரண்டறப் பிணைந்த தொன்றாகலிற், பச்சைமணியின் ஒளியும் செம்மணியின் ஒளியும் அதன்கண் ஒருங்கு விராய்க் காணப்பட்டதென்றார்.பச்சைநிறம் அம்மைக்குஞ் செந்நிறம் அப்பற்கும் உரியன. இறைவன் ஆண்மையும் அறிவும் மிக்கு அனல்போல் வெவ்வியனாய் நிற்கும் பெற்றியனாகலின் அவற்குச் செந்நிறமும், இறைவி பெண்மையும் அருளும் மிக்கு நீர்போல் தண்ணியளாய் நிற்குந்தன்மையளாகலின் அவட்குப் பசுநிறமும் உரியவாயின. ஆண்மை: பெண்மை, வெம்மை: தண்மை, செம்மை பசுமை என்னும் இருகூற்றிலே உலகின்கண் உள்ள எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எல்லா நிறங்களும் வந்து அடங்குமாறு காண்க. இவையிற்றுக் கெல்லாம் முதல்வரான அம்மையப்பர் மாட்டும் இவை தமக்கெல்லாம் முதலான இருவேறியல்பும் உளவாதல் சிவஞானபோத

ஆராய்ச்சியில்

விளங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/287&oldid=1589528" இலிருந்து மீள்விக்கப்பட்டது