உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

255

விரித்துரைத்தாம். ஆண்டுக் காண்க. ஈண்டவை யெல்லாம் எடுத்துக் காட்டலுறின் இது து மிக விரியுமென அஞ்சி அவையிற்றைக் காட்டிற்றிலம்.

‘மரகதம்’ பச்சைமணியைக் குறிக்கும் ஒரு வடசொல்.

குவால் - குப்பல், மேடு; திவாகரம். தோன்றிய பொன் னொளி வடிவு எல்லை காணப்படாவாறு உயர்ந்து சென்ற மையின் அதனுள் விரவித் தோன்றிய பச்சைநிறமும் உயர்ந்து சென்ற தென்பார் ‘மரகதக் குவால்' என்றருளிச் செய்தார். மாணிக்கத்தை

'மணி' ஈண்டுச் செம்மணியாகிய உணர்த்துகின்றது; இச்சொல் ஒரோவழி இப்பொருட்டாதலை "மணிமருள் தேன்மகிழ்” என்னும் பரிபாடல் (பரிபாடல் 21) அடிக்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க.

-

பிறக்கம் பெருக்கம், திவாகரம். இதற்கு உயர்ச்சி என்றுரைப்பினுமாம்.

“திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்” என்னுந் தாடர்மொழியுள் திருமால் என்னும் பெயர் இல்லை யாயினும், திசைமுகன் என்னும் ஆண்பால் ஈறும் ‘தேடினர்’ என்னும் பலர் பால் ஈறுந் தம்முள் இயையாமையின், பின்னை யதற்கேற்பத் ‘திருமால்' என்பது அவாய்நிலையால் வருவித் துரைக்கப்பட்டது.

திசைமுகன் - நாற்றிசைகளையும் முகமாகவுடையவன்.

னி, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதற் பொருட்டு நூல்களிற் சொல்லிய முறையால் அகத்தே மூலத்தினும் அதற்கு மேலும் உந்தியினும் நெஞ்சத்தினும் அண்ணத்தினும் நெற்றி நடுவினும் கருத்தை வைத்து இறைவனை அறிய முயல்வார்க்கும் அவன் சேயனாய் நிற்றலை யுணர்த்துவார் 'முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்' என்று கூறினார்.

முறையுளி - முறையால்; 'உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல் (திருக்குறள் 545) என்பர் பரிமேலழகியார்.

'ஒற்றுமைகொண்டு நோக்குமுள்ளத், துற்றவர்வருந்த உறைப்பவர்க் கொளித்தும்' என்பது கடும்பனி நாளில் நீரிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/288&oldid=1589529" இலிருந்து மீள்விக்கப்பட்டது