உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

259

யுடையாரையும், 'ஒற்றுமை கொண்டுநோக்குமள்ளத் துற்றவர் வருந்த உரைப்பவர்' என்பதனால் அதனோடு புறமுயற்சியும் உடையாரையும், சேண்வயின், ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை யிருந்தவர் என்பதனால் அகப்புற இன்பங்கள் முற்றும்விட்டு முயல் வாரையும் ஓதியருளினாராகலின், அது கூறியதுகூறலன்மை யுணர்க. அஃதொக்குமாயினும், இறைவனை யிங்ஙனமெல்லாம் வருந்தி நாடுந் தவமுயற்சியுடையார்க்கும் அவன் தன்னைக் காட்டாது ஒளிக்குமாயின், பின்னர் இறைவனை யடைதற்கு முயலும் முயற்சியெல்லாம் பயனிலவாம் போலு மெனின்; அற்றன்று, இவ்வுடம்பையும் இதன்கண் அகக்கருவி புறக் கருவிகளையும் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பல நுகர் பொருள்களையும் எல்லாம் உயிர்கட்கு வகுத்துக் கொடுத்த முதல்வன் அங்ஙனம் அவைதம்மைக் கொடுத்தது அவற்றால் அவர் அறிவு விளங்கி அவனது அருட்செயலை அவற்றுள்ளுந் தம்முள்ளும் ஓவாது கண்டு தஞ்செயலற்று அவனருள் வழி நிற்றற்கேயா மென்பதனை உணராது, அவன் றந்த உடம்பையும் கருவிகளையும் யான் எனதெனுந் தமது அறிவு முனைப்பால் வாட்டி வருத்தி அவன் கருத்துக்கு மாறாய் இயற்றுந் தவமுயற்சி பயனிலதா மென்பதே ஈண்டு அடிகளின் திருவுள்ளக் கிடையா மென்றோர்க. இக்கருத்துப்பற்றியே தவமுதல்வரான திருமூல நாயனாரும்,

C

“அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆமென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே"

“எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினுங் கண்ணா ரமுதனைக் கண்டறி வாரில்லை உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கிடிற் கண்ணாடி போலே கலந்திருந் தானே'

6 எனவும்,

எனவும் அருளிச் செய்வாராயின ரென்க. “அவனருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/292&oldid=1589535" இலிருந்து மீள்விக்கப்பட்டது