உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

❖ 25❖ மறைமலையம் – 25

66

ணாதே” என்னும் திருமறைத் தமிழும், அவனருளாலே அவன்றாள் வணங்கி” எனவும், “நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார், வானோர் பிரானென்னை யாண்டிலனேல்' எனவும், எனவும், “காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணுமடியார் பிறப்பகலக் காணும் பெரி யானை” எனவும் அடிகள் பிறாண்டும் இத் திருவாசகச் செழுந் தமிழ் மறையுள் ஓதுந் திருமொழிகளும் உற்று நோக்க வல்லார்க்கு எல்லாப் பொருள்களுள்ளும் எல்லாவுயிர் களுள்ளும் நிற்கும் இறைவனையும் ஆங்காங்கு அவன் நிகழ்த்தும் அருள் நிகழ்ச்சிகளையுங் கண்டு அந்நிகழ்ச்சிவழியே தஞ் செயலற்று ஒழுகும் அருட்டவம் உடையார்க்கு அவன் அணுக் கனாய் வெளிப்பட்டு நின்று அருள்புரிவா னென்பதனைத் தெற்றென வுணர்த்தாநிற்கும் என்க.

துற்றவை - நுகர்ந்தவை; இச்சொல் இப்பொருட்டாதல் ஐம்புலத்தைத், “துற்றுவதுற்றம்" என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையால் (பரிபாடல் 20) உணரப்படும்.

ஆர்தல் - நிறைதல்; திவாகரம்.

பிணையல் - பின்னிய மாலை, திவாகரம்

தன்நேர் இல்லோன் தானேஆன தன்மை என்நேர் அனையோர் கேட்கவந் தியம்பி அறைகூசி ஆட்கொண் டருளி

மறையோர் கோலங் காட்டி அருளலும்

150 உளையா அன்பென் புருக ஓலமிட் டலைகடற் றிரையின் ஆர்த்தார்த் தோங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங்

155 கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் ஆற்றேனாக அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டுசெய்தனன்; ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித் தாங்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/293&oldid=1589536" இலிருந்து மீள்விக்கப்பட்டது