உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

160 றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;

தடக்கையின் நெல்லிக் கனிஎனக் காயினன்;

261

-

தன்நேர் இல்லோன் - தனக்கு ஒர் ஒப்பில்லாதவன். தானே ஆனதன்மை என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி தனக்குத்தானேயாய் இருந்த இயல்பினை என்னோடொத்த அத்தன்மையினரெல்லாம் செவிகொடுத்துக் கேட்குமாறு குரு வடிவில் எழுந்தருளிவந்து சொல்லி, அறைகூவி ஆட்கொண்டு அருளி - போர் செய்தற்குக் கூவியழைத்தாற்போல் வலிந்து அழைத்து என்னை அடிமை கொண்டருளி, மறையோர்கோலம் காட்டி அருளலும் அந்தணரது அழகிய வடிவத்தைக் கட்புலனாம்படி காட்டியருளின அளவிலே, உளையா அன்பு என்பு உருக ஓலம் இட்டு - வெறாத அன்பினால் என் என்பும் உருக ஓசையிட்டு, அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் தலைதடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி - அசையுங் கடலின் அலையைப் போற் பேரொலியினைச் செய்து செய்து மேலுயர்ந்து தலைமயங்கிக் கீழ் விழுந்து புரண்டு கதறி,பித்தரின் மயங்கி-பித்தம் உடையவர் போல் மயங்கிய, மத்தரின் மதித்து - - வெறி பிடித்தவரைப்போற் களித்து, நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் - நாட்டிலுள்ளார் மயங்கவும் கேட்டவர் இறும்பூது கொள்ளவும்,

பரிய

கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் மத நீரினையுடைய ஆண் ய யானை தன்மேற் பாகனை ஏற விடாமைக்குக் காரணமாய் அடைந்த மிகப் மதாளிப்பினைப்போல், ஆற்றேன் ஆக - என்பாற் பெருகிய அன்பினை யான் தாங்க ஏலாதேனாய்ச் சுழலா நிற்க, அவயவம் சுவைதரு கோல்தேன்கொண்டு செய்தனன் - என் உறுப்புகளை எல்லாம் தீஞ்சுவையினைத் தரும் பொம்பிற் றேன்கொண்டு ஆக்கினன், ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்த ஆங்கு - பகைவருடைய பழைய ஊர் மூன்றனையும் எழுச்சி பெற்றுத் தோன்றிய சிரிப்பில் உண்டான நெருப்பின் கண்ணே விழச் செய்தாற்போல, 'அன்று அருட் பெருந்தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்' என்னுந் தொடர் மொழியை அன்று ஒருத்தரும் வழாமை அடியோம் அடிக்குடில் அருட்பெருந்தீயின் ஒடுக்கினன் எனமாற்றி எம்மை ஆட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/294&oldid=1589537" இலிருந்து மீள்விக்கப்பட்டது