உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் - 25

கொண்ட அந்நாளில் ஒருவருந் தவறிப் போகாமே அடியேங் களது அடிமைச்சிறு வீடுகளைத் தனது அருளாகிய பெருந் தீயினிடத்தே ஒடுங்கச் செய்தனன் என்று பொருளுரைக்க, தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் - வளைந்த கையினிடத்தே ஏந்திய நெல்லிக்கனிபோல எனக்கு எளிவந்து விளங்கித் தோன்றுவானாயினன் என்றவாறு.

6

'மேற் கூறியவா றெல்லாங் கடவுளர்க்கும் அருந்தவர்க்கும் பிறர்க்குமெல்லாம் ஒளிக்கும் இயல்பினனாய் ஒப்பற்ற தனித் தலைமைக் கடவுளாயுள்ள பெருமான் ஒன்றுக்கும் பற்றாத என்னை யொப்பாருங் கேட்கும்படி தனது முழுமுதற்றன்மை யைத் தானே எடுத்துச் சொல்லி ஓர் அந்தணன் வடிவிற் றோன்றி என்னை அடிமை கொண்டருளிய அருட்பெருந் தகைமை என்னே!' என அடிகள் இப்பகுதியால் இறைவன் தமக்குச் செய்த பேரருட்டிறத்தை வியந்துரைத்தருளினார். இறைவன் நேரே போந்து தம்மை அடிமை கொண்டமை ஈண்டு அடிகளே தெளியக் கூறுமாறு பெரிதுங் குறிக்கொளற்பாற்று.

'தன் நேர் இல்லோன்' என்பதில் நேர் பெயர்ச் சொல்லாய் நின்று ஒப்பு என்றும், ‘என் நேர் அனையோர்' என்பதில் அது வினைச்சொல்லாய் நின்று ஒத்த என்றும் பொருள் தந்தவாறு

காண்க.

அனையோர் - அத்தன்மையோர்; இச்சொல் தன்மைப் அனையை யாகன்மாறே என்புழியுங்

பொருட்டாதல்

(புறநானூறு 20) காண்க.

அறைகூவல் - ‘போர்க்கு அழைத்தல்' என்பர். புறப் பொருள் வெண்பாமாலை உரைகாரர்; (காஞ்சிப் படலம் 7) போர்புரிதற்கு வலிந்த ழைத்தாற் போல ஈண்டு அடிமை கொண்டதும் வலிந்து இழுத் தேயாமென்பார் சொற்றொடரை ஈண்டுப் பெய்துரைத்தார்.

66

உளையா

-

ச்

ப் வெறுப்பில்லாத; இப் பொருட்டாதல் இளைய னிவனென உளையக் கூறி” என்புழியுங் (புறநானூறு 72) காண்க. .தாம் பிறராற் றுன்புறுத்தப்படுங்கால் இறைவன் தமக்கு அத் துன்பத்தை உடனே நீக்காது வாளா இருப்பினும் அது பற்றி அவனை வெறாது அன்பில் முதிர்ந்து நின்றமையின் உளையா அன்பு' என்று கூறினார். குதிரை வாங்க எடுத்துச்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/295&oldid=1589538" இலிருந்து மீள்விக்கப்பட்டது