உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

263

சென்ற பொருளையெல்லாந் திரும்பத் தரும்படி பாண்டியன் அடிகளைப் பலவாறு துன்புறுத்திய காலத்தும் அவர் இறைவனை வெறாது பேரன்பு மீதூர்ந்து நின்றமை காண்க. இறைவன் றிருவுளத்திற்கு இசைவானால் எத்தகைய துன்பம் வரினும் அது தமக்கும் இசைவாம் என அடிகள் கொண்டமை “நரகம்புகினும், எள்ளேன் திருவருளாலே யிருக்கப் பெறினி றைவா” என்று அவர் திருச்சதகத்துள் ஓதியவாற்றால் நன்க றியப்படு மென்பது.

ஓலம் -ஒலி என்பர் பிங்கலந்தையுள்; அன்பு மீதூர்தலால் அதனை யாற்றாது இடும் ஒலி ஈண்டு ஓல மெனப்பட்டது; துயர் மிகுந்தவிடத்து இடும் ஒலியும் ஓல மெனப்படும். துன்பமாயினும் இன்பமாயினும் அளவின்றியே பெருகியக்கால் ஓ வென்னும் ஓசையுண்டாதல் மக்களெல்லார்மாட்டும் இயல்பாகக் காணக் கிடத்தலால் இச்சொல் அவ்விரண்டற்கும் பொதுப்படநின்றது.

-

ஆர்த்து பேரொலிசெய்து; 'ஆர்ப்பு' ஒன்றலாப் பேரொலி என்பர் திவாகரர். ‘ஆர்த்து ஆர்த்து' என இருகால் அடுக்கியது விரைவுபற்றி; என்னை? “இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தலென், றவைமூன் றென்ப ஒருசொல் அடுக்கே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின் (சொல் 411)

-

தலைதடுமாறா வீழ்ந்து தலை தடுமாறி விழுந்து; 'தடுமாறா' செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தடுமாற்றம் மயக்கம் என்னும் பொருட்டாதல் "படுமழை மொக்குளிற பலகாலுந் தோன்றிக், கெடுமிதோர் யாக்கை யென்றெண்ணித், தடுமாற்றம், தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறிவாளரை என்னும் நாலடியாரிலுங் காண்க. உடலலையைப் போல ஆர்த்து ஓங்கி வீழ்ந்து புரண்டு அலறி

என்க.

பித்தம் மயக்கத்தைச் செய்வதாகலின் அறிவு மயங்கினார் ‘பித்தர்' எனவும், மதம் களிப்பினைத் தருவதாகலின் அதனை யுடையார் 'மத்தர்' எனவும் வேறுபிரித் தோதப் பட்டார்.

வெறித்தல், களித்தல் எனப் பொருடரும். ‘மத்’ என்னும் வடசொல் முதனிலையிற் பிறந்த வினையாகலின் 'மதித்து' என்பதற்குக் களித்து எனப் பொருளுரைத்தாம்; இதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/296&oldid=1589539" இலிருந்து மீள்விக்கப்பட்டது