உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் - 25

பாராட்டி எனப் பொருளுரைத்தல் பொருந்தாமை கண்டு கொள்க.

பேரன்பால் நிரம்பினார் செயலும் அறிவு மயங்கினார் செயலும் வெறித்தார் செயலும் தம்மும் பெரும்பான்மையும் ஒத்தலின், பித்தர் மத்தரை ஈண்டுவமையாக எடுத்துக் கூறினார். இவ்வுண்மை,

"ஞாலமதின் ஞாநநிட்டை யுடையோருக்கு

நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்

செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை

கோலமிலை புலனில்லை கரண மில்லை

குணமில்லை குறியில்லை குலமு மில்லை

பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வார்

என்னும் சிவஞானசித்தித் திருப்பாட்டில் இனிது காட்டப் பட்டமை காண்க.

சால்

‘கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின்' என்பதில் அவாய்நிலையாற் பாகனை என்னும் ஒரு வருவித்துரைக்கப்பட்டது. மிகுதியும் மதவெறி கொண்ட யானை, பாகன் வயப்படாமலும், அவன் ஏறுதற்கு இடங் கொடாமலும் விரைதல் இயல்பு. இதற்கு இப்பொருள் காண மாட்டாதார் தமக்குத் தோன்றியவாறெல்லாம் உரை கூறுவர்.

இவ்வூனுடம்பு, தன்னுள் இருந்த வுயிர் தூயதாய் இறைவன் மாட்டெழுந்த பேரன்பினுருவான வளவானே, அவ்வுயிரி னெழுச்சிக்குத் தக உடனொத்து நிற்குந்தன்மைத் தாகாமையின், அதனுள்ளிருந்த உயிர் அவ்வன்பின் பெருக்கை ஏற்கும் வாயில் காணாது பெரிதும் ஆற்றா நிலைமைத்தாம். அந்நிகழ்ச்சி தெரித்தற்கே 'தடப்பெரு மதத்தின் ஆற்றேனாக' என்றருளிச் செய்தார். இவ்வுடம்பு தாங்கும் அளவைக்குமேல் இன்பமாதல் துன்பமாதல் ஒருவர்க்கு நேர்ந்தக்கால் அவரதனை ஆற்றாராய் வருந்துதல் நம்மனோர் மாட்டும் ஓரோவழி நிகழ்தற்கண் வைத்துக் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/297&oldid=1589540" இலிருந்து மீள்விக்கப்பட்டது