உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

265

இங்ஙனம் ஆற்றாநிலைமைத்தாதல் கண்டு எல்லாம் வல்ல இறைவனே தன்மாட்டுப் பேரன்பாற் பொங்கும் தூயவுயிரின் இயல்புக்குத் தக அதனுடம்பையும் நுண்ணிய தூய சுத்த மாயையின் வடிவாகத் திரிபுறச் செய்து அதனை முழுதும் இன்ப வுருவாக்குதலின் அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் எனத் திருவாய் மலர்ந்தருளினார். நுண்ணிய தூய சுத்தமாயை பேரின்ப நுகர்ச்சிக்கு ஒத்தவாயிலாய் நிற்ப தொன்றா கலிற் பேரன்பினுருவான தூயவுயிர் இந்நிலவுலகி லுலவுங் காறும் அதனுடம்பு சுத்த மாயையின் வடிவாகத் திரிபுற்றுப், பின்னர் அஃது இறைவனோடு இரண்டறக் கலக்குங்கால் அதனை விட்டு வேறுநிற்கு மென்க.

அவயவம்’ உறுப்பு எனப் பொருள்படும் ஒரு வடசொல். கோற்றேன் - கொம்புத்தேன்; கோல் - மரக்கொம்பு; சூடாமணி நிகண்டு.

அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன்' என்பதனால் உறுப்புக்களை யெல்லாந் தீஞ்சுவைத் தேனாற் சமைத்த தொப்ப இன்பவடிவாக்கின்மை குறிப்பிக்கப்பட்டது.

இனி 'ஏற்றார் மூதூர் எழிநகை எரியின் வீழ்வித்த’ வரலாறு வடமொழி மகா பாரதத்தின் அநுசாசந பர்வத்திற் சொல்லப்பட்டிருத்தலின் அதனை இங்கே மொழிபெயர்த்துத் தருகின்றாம். 'இரும்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் க்கப்பட்ட மூன்று நகரங்கள் மறஞ்சிறந்த அசுரர்களுக்கு வானின்கண்ணே இருந்தன. மகவானாகிய இந்திரன் தன்னிடத் துள்ள படைக்கலங்கள் எவற்றாலும் அவைதம்மை அழிக்கக் கூடவில்லை. அதனாற், பெரியரான தேவர்களெல்லாருந் துன்புற்று மகாருத்திரரின் திருவடிகளை யடைந்து தம்மில் ஒருங்கு கூடி ‘உருத்திரரே, எல்லா வேள்விகளிலும் தேவரீர்க்கு உகந்த பசுக்கள் உளவாகுக.

6

பெருமையைத் தருவோரே, அரக்கர்களை அவர்களுடைய நகரங்களோடும் அழித்து, உலகங்களைத் துன்பத்தினின்றும் மீட்டருளும்' என்று வழுத்தினார்கள். அவ்வாறு வழுத்தப்பட்ட அவர் ‘அங்ஙனமே ஆகுக' என்று கூறித் திருமாலை அம்பாகவும், தீக்கடவுளை அதன் பல்லாகவும். வைவசுவதன் புதல்வனான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/298&oldid=1589542" இலிருந்து மீள்விக்கப்பட்டது