உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் - 25

.

யமனை அதன் இறகாகவும், எல்லா வேதங்களையும் வில்லாகவும், சிறந்த சாவித்திரியை நாணாகவும் அமைத்து நான்முகளைத் தன் தேர்ப்பாகனாக இருத்தி, ஞாயிற்றின் நிறத்தையுடையனவும் உலகை எரிக்கும் நெருப்பை யொத்த காடுமை வாய்ந்தனவும் ஆன மூன்றாய்ப் பிணைக்கப்பட்ட பல்லம்புகள் மூன்றினால் இசைந்த காலத்தே அம்மூன்று நகர்களையும் எய்தனர். அவ்வசுரர்கள் தம்முடைய நகரங் ய களோடும் உருத்திரரால் எரிக்கப்பட்டனர். இறைவன் திரி புரங்களை எரித்த இவ்வரலாறு எசுர் வேதத்திலும் சரபோபநிடதத்திலும், காந்தம் மற்சம் இலிங்கம் முதலான புராணங்களிலும் காணப்படுகின்றது. இவற்றுள் உபதேச காண்டத்தில் மட்டும் சிவபிரான் நகை நெருப்பிலும் அம்பிற்றீயிலும் திரிபுரங்களைப் படுவித்தார் என்பது சொல்லப் பட்டிருக்கின்றது. மேற்காட்டிய பல நூல்களிற் காணப்படும் இவ்வரலாற்றின் வகைகளும் பல திறமாய்க் காணப்படுகின்றன. அது நிற்க.

இம்

இனி, முப்புரங்களாவன எவையென்று உண்மையான் நோக்குவார்க்கு ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களின் காரியங்களேயா மென்பது நன்கு விளங்கும்; ம் மலங்கள் மூன்றானுங் கட்டுண்டு நிற்கும் உயிர்கள் தூயவாய் றைவன் திருவடியைத் தலைக்கூடுதற் கேற்ற காலம் வந்த வளவானே அம்மும்மலக்கட்டும் இறைவன்றன் ஞானவனலால் எரிக்கப்பட்டுப் போக அவ்வுயிர்கள்முற்றுந் தூயவாய் விடுபட்டு அவனருளோடு இரண்டறக் கூடா நிற்கும் என்க. திரிபுர மெரித்தவுண்மை இதுவே யாதல் ஞானயோகத் தலைவரான திருமூலர்,

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார்அறி வாரே”

என்று அருளிச் செய்தவாற்றாற் றெளியப்படும்.

‘ஏற்றார்’ பவைரெனப் பொருள்படுதலைப் 'போரெ திர்ந்து ஏற்றார்' என்புழியுங் (பரிபாடல் 18) காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/299&oldid=1589543" இலிருந்து மீள்விக்கப்பட்டது