உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

267

முதுமை ஊர் 'மூதூர்' என்றாயிற்று; முதுமை என்பதன் ஈறுகெட்டு முதல் நீண்டது.

இறைவனைக் குழீஇய கடவுளர் ஒவ்வொருவரும் ‘எம் மாலன்றோ இம்முப்புரங்களும் அழிவுறப் போகின்றன!' என்று தம்மிற்றாங் கருதிச் செருக்கினாராகலின் இறைவன் அவரது அறியாமை யுணர்ந்து கிளர்ச்சிபெற நகைத்தமையின் ‘எழில் நகை' என்றார்.எழில் - எழுச்சி, கிளர்ச்சி; இஃதிப்பொருட்டாதல் மேலே காட்டினாம்.

அடிகளும் அடிகளோடு உடனிருந்த தொண்டர்களும் றைவன் றிருவருளால் தம்முடம்புகளுந் தூயவாகத் தாம் அவன்றிருவடிப் பேரின்பத்தின்கண் ஒடுக்கப்பட்டமையின் ‘அன்று, அருட்பெருந்தீயின் அடியோம் அடிக்குடில், ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்' என்றருளிச் செய்தார். தம் உடம்புகள் அருள்நெருப்பாற் றூயவானமைக்கு, நகை நெருப்பால் முப்புரங்கள் எரிந்து தூயவானமை உவமையாயிற்று.

அடிமைக்குடில் ‘அடிக்குடில்' என்றாயிற்று; சிந்தாமணி யுள்ளும் ‘அடிப்பணி' என்னுஞ் சொற்றொடர் ‘அடிமைப்பணி’ என்பதன் விகாரமென்றார் நச்சினார்க்கினியர். (சீவக சிந்தாமணி 552) குடிலுக்குரி யாரது அடிமைத் தன்மை குடின்மேல் ஏற்றப்பட்டது.

குடில்’ சிற்றில் என்பர் திவாகரர்.

தடக்கை - வளைந்த கை; அஃதாவது உள்ளங்கை; 'தட வென்கிளவி கோட்டமுஞ் செய்யும்' என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். (சொல் 321)

நீர்விடாய் கொண்டு வருந்தினார் அது தீர்தற்கு உள்ளங்கையிற் கிடைத்த நெல்லிக்கனி எளிதிற் பயன்படுதல் போலவும், அது கையிற் கிடைத்தவளவானே விடாய்தீர்க்கும் அதன் நீர்மை அதனை யுடையார்க்கு இனிது விளங்குதல் போலவும் இறைவன் தமது பிறவித்துன்பத்தை எளிதிற் போக்குமாறு தமக்குத் கிடைத்த படியும், கிடைத்த அவ்வாண்டவன் அத்துன்பத்தைப் போக்கும் அருள்நீர்மைய னாதல் தமக்குத் தெற்றென விளங்குகின்றபடியும் உணர்த்துவார் 'தடக்கையின் நெல்லிக்கனி எனக் காயினன்' என்றருளிச் செய்தார். தன்னை யுண்டார்க்கு உடனே நீர் வேட்கையினைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/300&oldid=1589544" இலிருந்து மீள்விக்கப்பட்டது