உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம்

25

போக்குதலோடு அடுத்து நீர்பருகுங்காற் றீஞ்சுவையினையும் பயத்தலால் ‘நெல்லிக்கனி'யை ஈண் டுவமையா வெடுத்துக் காட்டினார்.இறைவனைத் தலைக் கூடினார்க்கும் பிறவிப்பணி தீர்தலேயன்றிப் பேரின்ப நுகர்ச்சியும் ஒருங்குநிகழா நிற்கு மென்பதூஉம் இவ்வுமையாற் பெற்றாம். உள்ளங்கையிற் கிடைத்த நெல்லிக்கனி நீர்வேட்கை எளிதிற் றீர்க்கும் மருந்தாதல் பற்றியும், அங்ஙனங் கிடைத்த வளவானே தான் பயன்படு மாற்றினை எளிதில் விளங்கச் செய்தல் பற்றியும் அன்றே இதனை ஒரு பழமொழியா வழங்கி வருகின்றன ரென்பது.

சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது

165 தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன்

செழுந்தண் பாற்கடற் றிரைபுரைவித் துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப

170 வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்றழை குரம்பை தோறு நாயுடல் அகத்தே

குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள்

175 ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ

துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்

180 கருணை வான்றேன் கலக்க

அருளொடு பரா அமு தாக்கினன் பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/301&oldid=1589545" இலிருந்து மீள்விக்கப்பட்டது