உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

-

269

சொல்லுவது அறியேன் சொல்லத்தக்கது ஏதும் அறிந்திலேன், வாழி எம்பெருமானே நீ வாழ்வாயாக, முறை யோ தரியேன் நாயேன் என்பதை நாயேன் தரியேன் முறையோ என மாற்றி நாயை யொத்தவனான அடியேன் தாங்கேன் இது நீதீயோ எனப் பொருளுரைக்க, தான் எனைச் செய்தது தெரியேன் தெரியேன் - எம் - எம் பெருமான் என்னை ஆக்கியவகை இன்னதென்றும் தெரிந்திலேன், ஆ ஆ செத்தேன் - ஐயோ நான் இறந்தேன், அடியேற்கு அருளியது அறியேன் - அடியேனுக்கு எம்பெருமான் அருள் செய்தது ஏதுக்காக என்றும் அறிந்;தலேன், பருகியும் ஆரேன் - எம்பெருமான் அருளிய பேரின்பத்தைக் குடித்தும் நிறைவு பெற்றேன், விழுங்கியும் ஒல்லகிலேன் - அதனை முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன், செழும் தண் பால் கடல் திரை புரைவித்து செழுமையான குளிர்ந்த பாற்கடலின் அலையை ஓக்கச் செய்து, உவாக்கடல் நள்ளுநீர் உள் அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் - முழு நிலாக் காலத்துக் கடலின் நடுவிலுள்ள நீரைப் போல எனது உள்ளத்தின் உள்ளிடம் நிரம்பச் சொல்லினளவையுங் கடந்து பேரின்ப அமுதமானது மயிரின் அடிதோறும் வந்து நிறையச் செய்தனன், கொடியேன் ஊன் தழை குரம்பைதோறும் - கொடியவனாகிய எனது ஊன் மிகுந்த சிறிய உடம்புதோறும், நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு இன் தேன் பாய்த்தி - நாய் போல் இழிந்த எனது உடம்பினுள்ளே இருக்குஞ் சிறு வீடு அமைத்துக் கொண்டு இனிய தேனைப் பாயச்செய்து நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் நிறைந்த புதுமையான அமுத ஒழுக்குகளை எலும்பின் துளைதோறும் ஏறச் செய்தனன்,

உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச்செய்த ஆங்கு உருகுவதாகிய ஓர் உள்ளத்தையே முதலாகக் கொண்டு அதனைக் கட்புலனாகும் ஒரு வடிவமாகச் செய்தாற்போல, எனக்கு அள் ஊறு ஆக்கை அமைத்தனன் - எனக்குச் செறிந்து ஊறும் உடம்பை ஆக்கி வைத்தனன், ஒள்ளிய கன்னற்கனி தேர்களிறு எனக் கடை முறை என்னையும் இருப்பது ஆக்கினன் ஒளிபொருந்திய கரும்பையும் விளவின் கனியையும் உணவு கொள்ளும் ஆண் யானையைப் போல முடிந்ததரமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/302&oldid=1589546" இலிருந்து மீள்விக்கப்பட்டது