உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

கலக்க

-

  • மறைமலையம் 25

ஒன்றுக்கும் பற்றாத என்னையும் பேரின்பத்தில் நிலைபெற்றி ருப்பதாகச் செய்து வைத்தனன், என்னில் கருணை வான் தேன் என்னுள்ளே அருளாகிய தூய தேன் கலவாநிற்க, அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் பால் அறியாப் பெற்றியோன் என்பதைப் பிரமன் மால் அறியாப் பெற்றியோன் அருளொடு பரா அமுது ஆக்கினன் என மாற்றி நான்முகனுந் திருமாலும் அறியாத தன்மையையுடைய எம்பெருமான் அவ்வருளோடு மிக்க அமுதத்தினையும் செய்துவைத்தான் என்றவாறு.

இன்பமே உருவாயினார்க்கு அவ்வின்பத்தையன்றிப் பிறிதொன்றுந் தோன்றாமையில் வேறேதும் எடுத்துக் கூறுதற்கு ஏலாமையானும், அவ்வுருவாய் நின்று அதனை நுகர்வார்க்கு அதனியல்பு விளங்குவதன்றி அதனியல்பினைப் பிறர்க் கெடுத்துக் காட்டல் ஒருவாற்றானும் ஆகாமையானும்

'சொல்லுவதறியேன்' என்றருளிச் செய்தார்.

L

வாழிய என்பதன் ஈறு கெட்டு 'வாழி' என நின்றது; இஃது ஈண்டு இரக்கக் குறிப்பின்கண் வந்தது.“அடிபணிந் தருளு வாழி" என்புழிப்போல (சிந்தாமணி, 2900) அசை நிலை யெனினுமாம்.

பேரின்பப் பெருக்குத் தம்மளவின் மிகுதலின் ‘தரியேன் நாயேன்' என்றார்.

ஊன்வடியில் நின்ற வுடம்பு இப்போது இன்பவடிவாம்படி இறைவன் செய்த திறம் தம்மால் அறியலாகாமையின் “தானெனைச் செய்தது தெரியேன்” என்றார்.

'ஆஆ' என்பன இடையே உடம்படுமெய்பெற்று ‘அவா' என்றாயின; “ஆவா விருவரறியா" என்புழிப் (திருச்சிற்றம்பலக் கோவையார் 72) போல, ஈண்டிவை இரக்கத்தின்கட் குறிப்பாய் வந்த இடைச்சொற்கள்.

இன்பத்தின்கட் படிந்து அதனுருவாயினார் தம்மை ‘நான்’ என்றும் ‘எனது' என்றும் முனைத்துக் காணமாட்டாமையின் அவை யிரண்டன் ஒழிவு கூறுவார். ‘செத்தேன்” என்றருளிச் செய்தார். இக்கருத்தேபற்றித் திருவள்ளுவனாரும்,

“யான் எனதென்னுஞ் செருக்க றுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்"

என்றருளினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/303&oldid=1589548" இலிருந்து மீள்விக்கப்பட்டது