உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவாசக விரிவுரை

271

அடியேற் கருளிய தறியேன்” என்றது ஒன்றுக்கும் பற்றாத அடியனேனுக்கு இத்துணை எளியனாய் வந்து இறைவன் அருளியது ஏதுக்காகவோ! என இறைவன் அன்பர்க் கெளிய னாதலை வியந்துரைத்தவாறு.

கை

பருகுந்தொறும் பின்னும் புதிதாய் அடங்கா வேட் யினைப் பயக்கு நீரதாகலிற் பேரின்பத்தைப் ‘பருகியும் ஆரேன்' என்றார்.“புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்" எனவும், “ஆரா வின்பத் தன்புமீ தூர” எனவும் (9வது செய்யுள்) அடிகள் திருச்சிற்றம்பலக் கோவையாரிலுங் கூறியது காண்க.

ருகுதல் - குடித்தல்; ஆர்தல் - நிறைதல்; பிங்கலந்தை.

பருகுதலாவது நீர்போல் நெகிழ்ந்திருப்பவற்றைச் சிறுகச் சிறுகக் குடித்தல்; விழுங்குதலாவது வாழைக்கனிபோற் குழைந்திருப்பவற்றின் ஒரு கவளத்தை முழுதுமாய் உண்டல்.

-

ஒல்லகில்லேன் பொறுக்க மாட்டேன்; ‘ஒல்லல்’ பொறுத்தலெனப் பொருள்படுதல் “ஒல்லுவ சொல்லாது” என்புழியுங் காண்க. (பரிபாடல்12)

பேரின்பம் மிகத் தூயதாகலானும், அது மேன் மேல் எழுதலானும் ‘செழுங்தண் பாற்கடற் றிரைபுரை வித்து' எனப் பாற்கடலையும் அதன் அலையையும் உவமையாக் கூறினார்.

உவா - நிறைநிலாக் காலம்; இஃது "உவவுமதி யுருவின்” என்பதனாலும் உணர்க. (புறநானூறு 3) இளைய எனப் பொருள்படும் ‘யுவந்’ என்னும் வடசொல்லும், நிறைவு எனப் பொருள்படும் ‘உவவு' என்னுந் தமிழ்ச் சொல்லும் வேறாதலை உணராதார் அவை யிரண்டும் ஒன்றென்பர்.

உவாநாளிற் கடல் பொங்குமென்ப வாகலின் 'உவாக்கடல் நள்ளு நீரை ஈண் டுவமையாக எடுத்தோதினார். நிறைமதி வருகையாற் கடல் கிளர்ந்தாற்போல இறைவனது வரவாலும் பேரின்பம் உள்ளத்தே மிகுந்து நிரம்பிய தென்றார்.

-

நள்ளு நீர் - நடுவிலுள்ள நீர்; நடு வெனப் பொருடரும் ‘நள்’ என்னும் பெயரினடியாகப் பிறந்த வினை. இச்சொல் இப் பொருட்டாதல் "நள்ளிருட்கண் வந்தார் நமர்" என்பதன் (புறப்பொருள் வெண்பா மாலை 1,6) உரையிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/304&oldid=1589549" இலிருந்து மீள்விக்கப்பட்டது