உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் 25

― -

ததும்ப-நிரம்ப; பிங்கலந்தை.

சொல்லினால் எடுத்துக் காட்டுதற்கும் ஏலாதவாறாய் அப் பேரின்பவமுதம் உடம்பின் மயிர்க்கால் வரையில் வந்து நிறையச் செய்தலின் ‘வாக்கிறந் தமுதம் மயிர்க்கா றோறும், தேக்கிடச் செய்தனன்' என்றருளினார். உடம்பின் அகத்தேயிருந்து நிரம்பி வரும் அமுதம் அதன்மேலுள்ள மயிர்க் காலுக்குமேற் செல்லுமிடம் பிறிதின்மையின் மயிர்க்காலளவில் வந்து நிறைய என்றுரைத்தருளினார்.

தேக்கிடநிறைய : 'தேக்கல்’ நிறைதல் என்பர் பிங்கலந்

தையுள்.

.

'தழை' பெயரினடியாகப் பிறந்த வினை; தழை - இலை; மரத்தின்கண் இலைகள் நிறைந்திருந்தாற்போல, உடம்பின்கண் ஊண்செறிந்திருத்தலின் ‘ஊன்தழை குரம்பை' என்றார்.

குரம்பை - குடில்; திவாகரம். குடில் போறலின் இவ்வுடம் புங் ‘குரம்பை’ எனப்பட்டது.

இறைவன் தனது உடம்பைத் தானிருக்கு மிடமாகக் கொண்டமை கண்டு அடிகள் ‘நாயுடல் அகத்தே, முரம்பை கொண்டு' என்று கூறினார்.

இனியதேன் போன்ற பேரின்பத்தை உடம்பெங்கும் இறைவன் நிறைத்தான் என்றவழிக் கற்போல் வலிதாய என்புகளினூடு அதனை நிறைக்குமாறு யாங்ஙனம் என்று ஐயுறாமைப் பொருட்டு ‘ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் என்றருளிச் செய்தார். என்பினூடு மிகக் குறுகிய சிறு சிறு புரைகள் உளவென்பது அதன் அடியிற் காணப்படும், அவற்றின் வாயில்களான சிறு சிறு துளைகளால் அறியப்படும்.

இப்பேரின்ப ஒழுக்கு இதற்குமுன் கண்டறியப்படாத தொன்றாகலின் ‘அற்புதமான அமுத்தாரை’ என்றார்.

‘தாரை' என்பது தாரா என்னும் வடசொற்றிரிபு; தாரை -

ஒழுக்கு.

என்பு என்னும் மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறாய் நின்றசொல் "மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்” என்பதனால் ‘ஏற்பு' (தொல்காப்பியம் எழுத்து 414) என்றாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/305&oldid=1589550" இலிருந்து மீள்விக்கப்பட்டது