உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

273

தொள் என்னும் முதனிலையிற் பிறந்த தொளை என்னுஞ் சொல் ‘துளை' எனத் திரிந்தது.

அன்பால் இடையறா துருகும் ஓர் உள்ளத்தையே முதலாக எடுத்து அதனால் ஓர் உருச் செய்தால் அது நொய்யதாய் உருகும் இயல்பிற்றாயே யிருக்குமாதலால், அங்ஙனமாகிய தமது யாக்கைக்கு உருகுவ, துள்ளங் கொண்டோ ருருச் செய்தாங்கு' என ஈ சய்தாங்கு' என உவமையெடுத்துக்

கூறினார். இஃது இல்பொருளுவமை.

அள் ஊறு ஆக்கை - செறிந்து ஊறும் உடம்பு; செறிந்து ஊறுதலாவது ஒவ்வோரிடத்து ஒவ்வொரு பகுதியாய் உருகாது எல்லாம் அடைய உருகுதல்.

அள்' செறிவு, நெருக்கம் எனப் பொருள் படுதலைத் திவாகரத்துட் காண்க; அள் என்னும் முதனிலையே அள்ளி என வினையெச்சமாய் நின்றாற்போற் பொருய் பயந்தது; இவ்வாறு வருதல் “வரிப்புனை பந்து” என்புழியுங் (திருமுருகாற்றுப்படை)

காண்க.

முற்றிய கரும்பினையும் விளங்கனியையும் விரும்பி யுண்ணுங் களிற்றியானை அவ்வுண்டற் சுவையின்கண் நிகழும் இன்பத்திற் செம்மாந்திருத்தல் போல, அடிகளையும் இறைவன் பேரின்ப நுகர்ச்சிக்கண் இறுமாந்திருக்க வைத்தமையின் 'ஒள்ளிய, கன்னற் கனிதேர்களிறெனக் கடைமுறை, என்னையும் இருப்பதாக்கினன்' என்றருளிச் செய்தார்.

‘கன்னற் கனிதேர்' என்பதில் ‘தேர்தல்’ கொள்ளுதல் எனப் பொருள்படுதலைப் பிங்கலந்தையிற் காண்க; ஈண்டு உணவு கொள்ளுதல்.

‘எம்பெருமான் எளியனேன் மாட்டும் வைத்த பேரருட்டிறத்தால், அவ்வருளோடு பேரின்பமும் என்னுள்ளே நிறைய வைத்தான்' என்பது குறிப்பிப்பார் ‘என்னிற் கருணை வான்றேன் கலக்க, அருளோடு பராவமுதாக்கினன்' என்றருளிச் செய்தார். இறைவன் தனது பேரின்பத்தை உயிர் கட்கு வழங்கவேண்டுமென்று கொண்ட பேரருட் பெருக்கால் அவர் தமக்கு அவ்வின்பப் பேறு வாய்த்தலின், அப்பேற்றிற்குமுன் அவர்பாற் பதிந்த அருளினையும் அதன் பின் அவர் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/306&oldid=1589552" இலிருந்து மீள்விக்கப்பட்டது