உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

❖ - 25❖ மறைமலையம் - 25

இன்பத்தினையும் அம்முறையே வைத்து ஈண்டு ஓதியருளினார்

என்க.

வான்தேன் - தூயதேன்; வால் என்னுஞ் சொல் வான் எனத் திரிந்தது; அங்ஙனந் திரிந்து நின்றுழியும் இச்சொல் அப்பொருள் பயத்தல் “வான்றுகள்” என்பதன்கட் காண்க. (பரிபாடல் 12)

'பரா அமுது' என்பதில் பரா எனுஞ்சொல் மிகுதிப் பொருள் தவருவதொரு வடமொழி. ஈண்டு மிக்க அமுதென்றத பேரின்பத்தை.

ங்ஙனமெல்லாம்

எளிவந்து தோன்றி அருளும் இன்பமும் வழங்கிய பெருமான், கடவுளரிற் சிறந்த நான்முகன் திருமால் என்னும் இருவருங் கூட அறிய இயலாத பெருந் தகைமையான் என்பது தெரிப்பார் ‘பிரமன்மா லறியாப் பெற்றியோன்' என்று கூறி முடித்தார்:

என்னும்

‘உ உளையா ளயா அன்பென் புருக ஓலமிட்டு' நூற்றைம்பதாம். அடிதுவங்கி இவ்வகவலின் ஈற்றடிகாறும், இறைவன் தமக்கு வழங்கிய பேரின்ப வயமாய் நின்று அடிகள் அவ்வின்பத்தினியல்பை ஒருவாற்றானாயினும் புலப்படுத் வேண்டிப் பெரிதும் முயன்று வருந்திப் பாடுமாறும், அங்ஙனம் புலப்படுத்துரைத்தற்குச் சொற்கள் ஏற்ற கருவியாகாமையின் இடையிடையே இவ்வகவலின் அடிகள் முச்சீராயும் இருசீராயுஞ் சுருங்கித் தெற்றுண்டு நடக்குமாறும் உற்றுணர்ந்து கொள்க.

துரைப்பான்

இனி, இத்திருவகவற்கண் உட்பகுதிகளின் பொருளியைபு ஒரு சிறிது காட்டுதும் : நம்மனோரது சிற்றறிவினால் அளக்கலாகாப் பேரளவினவாகிய அண்டங்களெல்லாம்

றைவன்றன் அருள்வெறிப் பரப்பினும் சிற்றணுக்களை யொப்பத் தோன்றுதலின், அவன்றன் பேரளவு சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டா இயல்பிற்றென முதல் ஆறடிகளானும் உணர்த்தி யருளினார்.

இனி, அவ்வண்டங்களிற் பெரியனாயினும், அவ்வண்டங் களுக்குத் தலைவர்களாக நிறுத்தப்பட்ட கடவுளராகிய மிக நுண்ணிய உயிர்களானும் அறியப்படாவாறு அவரினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/307&oldid=1589553" இலிருந்து மீள்விக்கப்பட்டது