உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

275

நுண்ணியனாயிருந்து அவரை யெல்லாம் இயக்குதலின் இறைவன் நுண்ணியவற்றுள் எல்லாம் நுண்ணியனா மென்பது ஏழாம் அடிமுதற் பன்னிரண்டாம் அடிகாறும் வைத்துரைத்தார்.

னி, அண்டத்தலைவர்களாகத் தன்னால் நிறுத்தப்பட்ட நான்முகன் திருமால் முதலான கடவுளரும், அறுவகைச் சமயத்தோர்க்கும் வீடுபேறாய் நின்ற வானவர் கூட்டங்களும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் ஒருங்குடைய இறைவனாகிய தன்னை யின்றித் தாமாகவே தந்தொழில் நடத்த வல்லுநர் அல்லராகலானும், அவரெல்லாம் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய தன்னை நோக்க ஞாயிற்றின் முற் புழுப் போல்வ ராகலானும், நுண்ணியவற்றுளெல்லாம் நுண்ணிய இறைவனது மதுகைத்திறம் பதின் மூன்றாம் அடிமுதற் பத்தொன்பதாம் அடிகாறும் வைத்து விளக்கியருளினார்.

தொழிற்படுத்துவோனும்

இனி, அண்டத் தலைவரும் அவரோ டொப்பாருமான மிக நுண்ணிய உயிர்களேயன்றி, அவரினுந் தாழ்ந்த கரத்தினராய் ம்மண்ணுலகத்தில் உலாவுஞ் சிற்றுயிர்களும், அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பினவாகிய ஞாயிறு திங்கள் வான் வளி தீ நிர் மண் முதலிய பொருள்களும் முறையே பயன் பெறுதலும் பயன்படுதலும் உடையவாமாறு அவற்றைத் இறைவனேயாவ னென்பது இருபதாம் அடிமுதல் இருபத்தெட்டாம் அடிகாறும் வைத்து அறிவுறுத்தருளினார். இப்பகுதிக்கண் ஏனைச் சிற்றுயிர்களை எடுத்து ஓதிற்றிலரா லெனின்; சிற்றுயிர்கட்கு வீடுபேறாய் நின்ற விண்ணோர் கூட்டங்களே இறைவனை நோக்கப் புழுவாய் ஒழிந்தன ராயின், ஏனை இச்சிற்றுயிர்கள் இறைவன் முன் எத்துணையராம்! அதனானுங், கறங்கோலைப் போல இந்நிலத் தின் மீதும் நிலைபெறாது பிறப்பு இறப்புக்களிற் பட்டுச் சுழலு தலானும் இச்சிற்றுயிர்களை ஈண்டுக் கிளந்து கூறற்கு அமர்ந்தி லராய், அவர்க்குப் பயன்பட்ட ஊழிகாலம் வரையில் நிலை பெற்றியங்கும் ஞாயிறு திங்கள் முதலியவற்றைக் கிளந்து கூறி அம்முகத்தால் அச்சிற்றுயிர்களை உய்த்துணர வைத்தார். என்னை? பயன்படும் பொருள்களைக் கூறியக்கால், அவற்றின் பயன் பெறுவார் தாமே பெறப்படுவராகலி னென்பது. இவ்வாற்றால் மிக நுண்ணிய வானோரினுந் தாழ்ந்த சிற்றுயிர்களும், அவர்க்குப் பயன்படும் பொருள்களினியக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/308&oldid=1589554" இலிருந்து மீள்விக்கப்பட்டது