உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் - 25

மேலவாற்றின் பின் வைத்து ஓதுதற்கு இயைபுடையவாதல் கண்டுகொள்க.

னி, அளக்கலாகா இயல்புகளுடைய இறைவனை ஒருவாற்றானும் உணர்தலும் உரைத்தலும் மாட்டாராயின் அவன்மாட்டுப் பேரன்புடையரானார் அம்மாட்டாமையினை ஒரு சிறிதும் பொறாராகலின், அவன் அன்பரல்லார்க்கு அவற்றாற் சேயனாயும், அன்பின் மிக்கார்க்கு எளியனாயும் நின்று அருளும் முறைமைகளை இருபத்தொன்பதாம் அடிமுதல் அறுபத்து நான்காம் அடிகாறும் வைத்துரைத் தருளினார்.

னி, அன்பரல்லாரால் ஒருவாற்றானும் உணர்தற்கரிய முதல்வன் தன்மாட்டு அன்பால் உருகும் அடியவர் தனதுண்மை யுருவினை எளிதிற் கண்டு இன்புறுதற்பொருட்டு மாதொரு கூறனாய்த் தோன்று மாற்றினை அறுபத்து நான்காம் அடியிற் றெளிவுற எடுத்துக் கூறி, அங்ஙனம் அன்பர்க்கு எளியனாய்த் தோன்றிய இறைவன் திருவுருவினைக் கண்டவளவானே பேரின்பமாகிய பெருங்கடல் பேரின்ப முகிலாய்க் கிளர்ந் தெழுந்து தமக்குந் தம்மோடொருங்கிருந்த தொண்டர்க்கும் நுகர்பொருளாமாறு பேரின்ப வெள்ளத்தினைப் பொழிந்த பெரும்பான்மையினை அறுபத்தைந்தாம் அடிமுதற் றொண் ணூற்றைந்தாம் அடிகாறும் அடிகள் விரித்துரைத்த திறம் பெரிதும் வனப்புடைத்தாதல் கண்டுகொள்க. இப் பகுதியில், மழை பொழியுங்காற் படுந் தோற்றங்கள் உலக இயற்கையிற் காணுமாறே வைத்துரைக்கப்பட்ட நுட்பஞ் சாலவும் வியக்கற் பாலதாம் என்க.

இனி, அவ்வாறு தமக்குந் தம்மோடிருந்த தொண்டர்க்கும் எளிவந்து தோன்றிப் பேரின்ப வெள்ளத்தை வழங்கிய வள்ளலை வாழ்த்துதற்கு அவா எழுதலின், தொண்ணூற்றைந் தாம் அடி முதல் நூற்றைந்தாம் அடிகாறும் தாம் வேண்டிய வாழ்த்துரைகளை எடுத்துக் கூறினார். பேரிரக்கமுடைய ஒரு வள்ளல்பாற் பெறுதற்கரியதொரு பொருளினைப் பெற்ற வறியர் அது பெற்ற வளவனே மகிழ்ச்சி மிக்கு அவ்வள்ளலை வாழ்த்துதல் இயற்கையாகக் காணப்படுதலிற், றமக்குப் பேரின் பத்தை வழங்கிய முதற்பெரு வள்ளலை கண்டு அடிகள் வாழ்த்தியது பொருத்தமேயாதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/309&oldid=1589556" இலிருந்து மீள்விக்கப்பட்டது