உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

6

277

இனி,பெறுதற்கரிய தொன்று பெற்றார் அதனை வழங்கிய வள்ளலை வாழ்த்துதன்மட்டின் அமையாது, அதனையடுத்து அவனைப் போற்றுதலுஞ் செய்தல் மரபாய்ப் போதரக் காண்டலின் நூற்றாயிரம் அடி துவங்கி நூற்றிருபத்தொன்றாம் அடிகாறும் இறைவற்கு வணக்க வுரைகளும் மொழிந்தருளினார்.

Moon, னி, இறைவன் எளிவந்து தோன்றித் தமக்கு வழங்கிய பேரின்பந் தாம் தமது யாக்கையோடிருந்து தாங்கமாட்டா மையினை நூற்றிருபத்திரண்டு இருபத்துமூன்றாம் அடிகளிற் சுருங்கக் கூறிப், பின்னும் அதனை விரித்துரைத்தற்கு வேட்கை மேன் மேல் எழுதலின், நான்முகன் முதலான கடவுளர்க் கெல்லாம் ஒளித்த திருக் கோலத்தின் அருமையினை நூற்றிருபத்து நான்காம் அடிமுதல் நூற்று நாற்பத்தைந்தாம் அடிகாறும் வைத்து வகுத்துக் கூறி, அதன்பின் அத்திருக் கோலம் தமக்கு எளிவந்து தோன்றிய பான்மையினை நூற்று நாற்பத்தாறாம் அடியிலிருந்து நாற்பத்தொன்பதாம் அடி வரையில் வைத்து விளக்கி, அவ் வருளுருவக் காட்சியிலிருந்து கிளர்ந்து தம்மை விழுங்கிய பேரின்பத்தின் பெற்றியினையும் அதனாற் றாம் ஆயவாற்றினையும் நூற்றைம்பதாம் அடிமுதல் நூற்றெண்பதாம் அடியாகிய இறுதிவரையும் தொடுத்து மொழிந்தருளினா ரென்பது.

இத் திருவகவல் இருசீர் முச்சீர் அடிகளால் இடை யிடையே சுருங்கி வந்தது; ஆசிரியர் தொல்காப்பியனார் இன்னோரன்னவற்றைக் குட்டவடியால் வந்த ஆசிரியம் என்பர்; என்னை? “மண்டிலங் குட்டம் என்றிவை இரண்டுஞ், செந்தூக் கியல என்மனார் புலவர்” என்றாராகலின் (தொல்காப்பியம் செய்யுளியல் 117) இதனுட் ‘செந்தூக்கு' என்றது ஆசிரியத்தை பிற்காலத்தார் இங்ஙனம் வரும் ஆசிரியத்தை ‘இணைக்குற ளாசிரியப்பா' என்று வழங்கினர். (யாப்பருங்கலக் காரிகை செய்யுளியல் 8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/310&oldid=1589557" இலிருந்து மீள்விக்கப்பட்டது