உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

நான்காவது அகவல் போற்றித் திருவகவல்

சகத்தின் உற்பத்தி

இத் திருவகவலில், வணக்கம் எனப் பொருள்படும் போற்றி எனுஞ் சொற் பெரு வரவிற்றாய்க் காணப்படுதலின் இஃது அச் சொற்பற்றிப் 'போற்றித் திருவகவல்' என்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உயிர்கள் உடம்புகளிற் பொருந்தித் தோன்றுமாறு முதற்கண் வகுத்துரைக்கப்படுதலின் இத் திருவகவற் கருத்துச் 'சகத்தின் உற்பத்தி' எனப் பழைய சான்றோராற் குறித்து வைக்கப்பட்டது. ஈண்டுச் 'சகம்' என்றது உலகத்துள்ள உயிர்களை.

5

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து

நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று

அடிமுடி யறியும் ஆதர வதனிற்

கடுமுரண் ஏனம் ஆகிமுன் கலந்து

ஏழ்தலம் உருவ இடந்துபின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியுங் காணா மலரடி இணைகள்

10 வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்

நான்முகன் முதல் ஆ வானவர் தொழுது எழ - நான்கு திருமுகங்களையுடைய பிரமன் முதலாக வானுலகத்துள்ள கடவுளர் பணிந்து எழாநிற்க, ஈர் அடியாலே மூ உலகு அளந்து - இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் நீட்டியளந்து, நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்ற செய் - நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழ்ச்சி யால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/311&oldid=1589558" இலிருந்து மீள்விக்கப்பட்டது