உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

279

அலரும்படி வணங்குதலைச் செய்யாநிற்கும். கதிர்முடித் திருநெடுமால் - சுடர் விரியும் முடியினையுடைய அழகிய நீண்ட மால், அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் நான்முகனோடு மாறுபட்ட அந்நாளில் திருவடியின் முடிவினை அறியவேண்டும் விருப்பத்தினால், கடுமுரண் ஏனம் ஆகி - மிக்க வலியினையுடைய பன்றியாகவடிவெடுத்து, முன் கலந்து ஏழ்தலம் உருவ இடத்து - முற்பட்டுக் கீழ் ஏழ் உலகங்களையும் ஊடுருவப் பிளந்து, பின் எய்த்து - பின் இளைப்புற்று, ஊழி முதல்வ சயசய என்று - ஊழிக் காலத்தும் முதல்வராய் நிற்கும் தேவரீருக்கே வெற்றி வெற்றி என்று சொல்லி, வழுத்தியும் காணா பரவியுங் காணாத, மலர் அடி இணைகள் தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டும், வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் என்பதை வார்கடல் உலகினில் வாழ்த்துதற்கு எளிதாய் என மாற்றி நெடிய கடல் சூழ்ந்த நில வுலகத்தின் கண்ணே பரவுதற்கு எளியவாம்படி என்று பொருளுரைக்க. இவ் வடியில் நின்ற எளிதாய்’ என்னும் வினையெச்சம் முன்னே எழுபத்தைந்தாம் அடியிலுள்ள ‘வந்து' என்பதில் வருதல் என்னும் வினையைக் கொண்டு முடிந்தது. இவ்வாறு ஒருவினை டை விட்டு நீளச் சென்று தான் கொள்ளும் வினையைக் காண்டு முடிதல் ‘மாட்டு' என்னும் உறுப்பாம் என்பது. என்னை?

-

"அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருண் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்”

வ்

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின். வினை யெச்சத்திற்கும் அது கொண்டு முடியும் வினைக்கும் இடையே ‘யானைமுதலா' என்பது துவங்கிக் கனவிலும் நினையாது என்ப தீறாக வந்தன வெல்லாம் ‘இடைநிலை’ ஆயின. இங்ஙனம் வருதலைத்

66

“தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின்

எச்சொல் ஆயினும் இடைநிலை வரையார்”

என்னுஞ் சூத்திரத்தான் (தொல்காப்பியம் வினையியல் 40) உணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/312&oldid=1589559" இலிருந்து மீள்விக்கப்பட்டது