உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

281

அதனால் அரியானவர் மகிழ்ந்து களங்கம் அற்ற காசியபரை நோக்கிக் கூறுவர்: ‘ஒரு வரத்தைக் கேள்; உனக்கு நன்மை உண்டாகுக; நீ வரம்பெறத் தக்கவனாக என்னாற் கருதப் படுகின்றாய்: அவர் கூறிய இச்சொற்களைக் கேட்டு, மரீசியின் மகனான காசியபர் கூறுவார்: பகவானே, அதிதிக்கும் எனக்கும் நீர் மகனாக வருதல் வேண்டும். அசுரரைக் கொல்வோனே, சக்கரனுக்கு இளைய தம்பியாக நீர் வருதல் வேண்டும். தளர்வுற்று வருந்துத் தேவர்களுக்கு நீர் உதவி புரிதல் வேண்டும். பேரொளியினரான விஷ்ணுவானவர் துறவியின் கோலமுடைய ராய்க் கரகம் ஏந்தித் தலையின் உச்சியிற் குடுமி யோடுங் குடை நீழலில் அதிதிக்கு அங்ஙனமே புதல்வனாய்ப் பிறந்தனர். இவ்வாறு தேவர்களால் வழுத்தப்பட்டு விஷ்ணு வானவர் குறள் வடிவெடுத்து, விரோசனன் மகனை அணுகித் தன்னடி யால் மூன்றடி இடம் இரந்தனர். மூன்றடியிடம் பெற்றுக் கொண்ட பின் திரிவிக்கிரமனான விஷ்ணு வியக்கத் தக்கதோர் உருவெடுத்து மூன்றடிகளால் உலகங்களைக் கைப்பற்றிக் காண்டார். எங்ஙனமென்றால், ஓரடியால் நிலம் முழுமையும், இரண்டாம் அடியால் வளி மண்டிலத்தையும், மூன்றாம் அடியால் வான் உலகத்தையும், ஓ இராகவனே, அவர் கவர்ந்து கொண்டார். அதன்பின் அசுரனாகிய பலிக்குப் பாதாளத்தில் ஓர் இருப்பிடத்தை வகுத்துக் கொடுத்து, அவற்குப் பகைவனை நீக்கிய பின்னர், இந்திரற்கு மூவுலக ஆட்சியினையுந் தந்தனர்.(வான்மீகி இராமாயணம் 1,31)”

அவ்வாறு திருமால் மூவுலகு அளந்த ஞான்று நான்முகன் முதலான கடவுளரும், முனிவரது தொழுது வணங்கினமையின் 'வானவர் தொழுதெழ' எனவும், 'நாற்றிசை முனிவரும் போற்றிசெய்' எனவும் அருளிச்செய்தார்.

6.

இனி, அங்ஙனங் கடவுளரானும் முனிவரரானும் தொழப் படும் அத்துணைப் பெருமைவாய்ந்த திருமாலும், இறைவன் அனற்பிழம்பு வடிவாய்த் தமதெதிரே தோன்றிய ஞான்று அவ்வடிவின் அடிக்கண்முடிவைக் காண்பான வேண்டி ஒரு பன்றி வடிவெடுத்துக் கீழ் ஏழ் உலகங்களையும் ஊடுருவப் பிளந்து சென்றும் அதன் முடிவறியப் படாமையின் இளைப் புற்று இறைவனை வழுத்தினாரென எங்கும் நிறைந்த சிவத்தின் எல்லையற்ற தன்மை எடுத்தோதினார். இங்ஙனந் திருமால்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/314&oldid=1589561" இலிருந்து மீள்விக்கப்பட்டது