உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

❖ 25❖ மறைமலையம் – 25

இறைவன்றன் திருவடி தேடிய வரலாறு பிற்காலத்திற் பாரதநூல் தமிழிற் பாடிய வில்லிபுத்தூராழ்வாரும்,

"ஓர்ஏனந் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் அந்தப், போர்ஏனந் தனைத்தேடிக் கணங்களொடும் புறப்பட்டான் புவனம் என்னும், சீர்ஏனல் வளர்கிரிக்குத் தெய்வதமாங் குழவியையுஞ் செங்கை ஏந்திப் பார்ஏனை யுலகனைத்தும் ஈன்றாளும் பரிவுடனே பதிபின் வந்தாள்” என நன்கெடுத்துக் கூறினார்.

.

இனித் திருமால் இறைவன்றன் அடிமுடி தேடிய வரலாறு லிங்கபுராணத்தில் விரித்துக் கூறப்பட்டிருத்தலின் அதனை ஈண்டு மொழிபெயர்த்துக் காட்டுதும். அது வருமாறு: “பிதா மகனான நான்முகள் கூறுவான் : பிரதானம் இலிங்கமென்று சொல்லப்படுகின்றது.பரமேசுவரன் இலிங்கி என்று சொல்லப் படுகின்றனன். ஓ தேவர்களே, என்னையும் விஷ்ணுவையும் பாதுகாத்தற் பொருட்டாக அது கடலினின்றும் எழுந்தது. சனலோகம் அளவும் வைமாநிகசிருட்டி இருடிகளோடும் நடைபெற்ற காலத்தில், திதிகாலம் முடிவுபெற்றவுடனே, நான்கு ஊழிகளும் ஆயிரம் முறையாக வந்து முடிய எல்லாம் ஒடுங்கிச் சத்தியலோகத்திற்குப் போனவுடனே, அசையாப் பொருள்க ளெல்லாம் மழையின்மையால் வற்றி வறண்டு போக, விலங்கு களும் மக்களும் மரங்களும் பேய்களும் ஊன்றின்னுங் கூளிகளும் கந்தருவரும் முறைமுறையே ஞாயிற்றின் கதிர்களால் எரிக்கப் பட்ட பொழுது பிரமனாகிய யான் இறுதியில் எல்லாவற்றோ டொப்ப ஆட்சியிழந்த நிலைமையை அடைந்தேன்.

ஒன்றாயுள்ள கடலானது மிகவுங் கொடுமையான இருளால் எங்குங் கவரப்பட்டிருந்தமையின் களங்கம் அற்றவனும், அமைதி யுடையோனும், ஆயிரந் தலைகளுடை யோனும், உலகத்திற்கு உயிராவோனும் ஆயிரக்கண்களும், ஆயிரங் கால்களும், ஆயிரங் கைகளும் உடையோனும், எல்லாம் அறிபவனும் எல்லாத் தேவர்களின் உயிர்வாழ்க்கைக்கு வாயிலாவோனும், இராசத குணத்தை யுடைமையால் தானே இரணியகருப்ப னாவோனும், தமோகுணத்தை யுடைமையாற் றானே சங்கர னாவோனும், சத்துவகுணத்தை யுடைமையால் எங்கும் நிறைந்த விஷ்ணு வாவோனும், எல்லா உயிர்களிலும் உண்மையால் மகேசுவரன் ஆவோனும், காலத்தி னியல்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/315&oldid=1589563" இலிருந்து மீள்விக்கப்பட்டது